மேலும் அறிய

Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?

வந்தவாசியில் கணவன் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட தகராறில் மனைவியின் சகோதரன் தாக்கி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு; விபத்து எனக்கூறி நாடகமாடிய இருவரையும் தட்டி தூக்கிய காவல்துறையினர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் டெல்லி கணேஷ் வயது (35). மாற்றுத்திறனாளியான டெல்லி கணேஷ் அதே பகுதியிலுள்ள டாஸ்மாக் பாரில் வேலைச் செய்துவந்துள்ளார். இவருடைய  மனைவி சுகன்யா வயது (31). டெல்லி கணேஷ் தினமும் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்து  மனைவியுடன் தகராறு செய்துவந்துள்ளார். காரணம், மனைவியின் நடத்தைமீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி, வெளியில் சென்றுவிட்டு வந்த மனைவி சுகன்யாவை சந்தேகப்பட்டு டெல்லி கணேஷ் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, கீழ்நமண்டி கிராமத்தில் வசிக்கும் தனது தம்பி நவீன்குமாருக்கு வயது (28) தொலைபேசி  மூலம் தெரிவித்துள்ளார்  சுகன்யா. நவீன்குமாரும் புறப்பட்டு வந்து அக்காவின்  கணவரான டெல்லி கணேஷிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார். இருவருக்கும் இடையே மோதலில் ஈடுபட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தின்போது டெல்லி கணேஷ் பின்பக்க மண்டையில் காயம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.


Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?

 

கணவனை அடித்து கொன்ற மனைவி 

உடனடியாக என்னசெய்வது என்று தெரியாமல் உடனடியாக சுகன்யாவும் அவருடைய சகோதரர்  யாருக்கும் தெரியாமல், டெல்லி கணேஷ் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். மருத்துவர்களிடம், `தனது கணவர் இருசக்கர வாகனதில்  இருந்து கீழே விழுந்துவிட்டதாக’சுகன்யா நாடகமாடியுள்ளார். மருத்துவர்களும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சையளித்தனர். ஆனாலும், கடந்த மாதம் 22-ம் தேதி டெல்லி கணேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து, தெள்ளார் காவல் நிலைய காவல்துறையினர்  விபத்து கோணத்திலேயே வழக்கு பதிந்து சரிவர புலன் விசாரணை மேற்கொள்ளாமல் விட்டிருக்கின்றனர். இதனால், சுகன்யா இயல்பாக இருந்திருக்கிறார். கணவரை இழந்துவிட்டோம் என்ற வலியே, வேதனையோ அவரிடம் காணப்படவில்லை. 


Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?

 

போலீசார் விசாரணையில் சிக்கிய மனைவி கைது 

ஏற்கெனவே, மனைவியின் நடத்தை சரியில்லை என்று டெல்லி கணேஷ் சண்டைப் போட்டு வந்ததற்கும், திடீரென டெல்லி கணேஷ் இறந்ததற்கும் ஏதோ சம்பந்தமிருப்பதாகவும் வீட்டின் அக்கம்பக்கத்தினரும், கிராமத்தினரும் சந்தேகப்பட்டுள்ளனர். இதையடுத்து, டெல்லி கணேஷின் தாய் தமிழ்ச்செல்வி, `தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது எனக்கூறி மருமகள் சுகன்யா, அவரது தம்பி நவீன்குமாரை விசாரியுங்கள்’ என தெள்ளார் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்திருக்கிறார். அதன்பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கையை சரியாகப் படித்து பார்த்து, மனைவி சுகன்யாவையும், அவரது தம்பி நவீன்குமாரையும் பிடித்து காவல்துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது, கட்டையால் தாக்கி கணவரை கொலைச் செய்ததை சுகன்யா ஒப்புக்கொண்டார். தானும் உடந்தையாக இருந்ததாக அவரது தம்பி நவீன்குமாரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். நேற்றைய தினம் இருவரையும் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர். மேலும்  இருவரையும் வேலூர் சிறையில்  அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget