Crime : வீட்டில் தனியே இருந்த பட்டியலின பெண் தீவைத்து எரிப்பு...பதைபதைக்கும் கொடூரம்..
வீட்டில் தனியாக இருந்த பட்டியலின பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தீவைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime : வீட்டில் தனியாக இருந்த பட்டியலின பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதிவெறியின் கோர முகத்தைக் காட்ட நம் நாட்டில் அன்றாடம் ஏதேனும் சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்த வரிசையில் ராஜஸ்தான் பார்மர் மாவட்டத்தில் தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த தலித் பெண் (40) ஒருவரை மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 40 சதவீத தீக்காயங்களுடன் ஜோத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பட்டியலின பெண் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஷாகூர் இந்த குற்றத்தை செய்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து, தலைமறைவாக இருந்த ஷாகூர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிப்பர் ஷாகூர். கடந்த வியாழன்கிழமை இரவு பட்டியலின பெண் ஒருவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அவரது வீட்டிற்குள் ஷாகூர் நுழைந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், அந்த பெண் மீது ரசாயனத்தை ஊற்றி கொடுமை செய்ததுடன், தீ வைத்து எரித்துள்ளார். பின்னர், இந்த பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 40 சதவீத தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இந்த வழக்கில் ஷாகூர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்" என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் கைலாஷ் சௌத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது," இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டியுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கை கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக காங்கிரஸ் இருப்பதாகவும் கூறினார்.
पीड़ित महिला के शीघ्र स्वास्थ्य लाभ की कामना करता हूं। इस संबंध में क्षेत्रीय प्रशासन से वार्ता कर इस घटना को तुरंत प्रभाव से संज्ञान में लेते दोषियों के विरुद्ध कड़ी कार्यवाही करने हेतु निर्देशित किया।#Rajasthan@BJP4Rajasthan @RajCMO
— Kailash Choudhary (@KailashBaytu) April 7, 2023
இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கைலாஷ் சௌத்ரி தெரிவித்திருக்கிறார். பட்டியலின பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.