மேலும் அறிய

கடலூர் : 6 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 62 வயது முதியவர் போக்சோவில் கைது

கடலூரில் 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த 62 வயது முதியவர் போக்சோவில் கைது.

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைத் தூக்கிச் சென்று கரும்பு தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்த 10 வயதுடைய சிறுமி 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியைக் கொண்ட சிறுமியின் தாய், தந்தை இருவரும் குடும்ப வருமானத்திற்கு ஈரோட்டில் உள்ள செங்கல் சூலை ஒன்றில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
 
பெற்றோர் ஈரோட்டில் கூலித் தொழிலாளியாக இருப்பதால், அவர்கள் 10 வயது மகளைப் பாட்டி கவனித்துப் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமி வழக்கம் போல வீட்டின் அருகே  கடந்த திங்கள்கிழமை விளையாடிக் கொண்டிருந்தார்.  அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் 62 வயது முதியவர், சிறுமி தனியாக விளையாடிக் கொண்டிருந்ததை உணர்ந்து, யாருக்கும் தெரியாமல் சிறுமியைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.  
 
இந்த தகவல் அவரது பெற்றோருக்குத் தெரிய வரவே பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வள்ளி தலைமையில் காவல் துறையினர் முதியவரை விசாரணைக்கு அழைத்து வந்து, குற்றம் சாட்டப்பட்டது குறித்து விசாரித்தனர். அப்போது சிறுமியை முதியவர் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் உத்தரவின் பேரில் கடலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
 
இது குறித்து கடலூர் மாவட்ட பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வள்ளியை தொடர்பு கொண்டு பேசிய போது, 62 வயது முதியவரால் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதை உறுதி செய்தார். மேலும் அவர், "பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோட்டில் செங்கல் சூலையில் கூலித் தொழிலாளியாக இருக்கின்றனர். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி இவர்களின் மூத்த மகளாவார். சம்பவத்தன்று சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அன்றைய தினம் சிறுமியை யாருக்கும் தெரியாமல் அருகே உள்ள கரும்பு தோட்டத்திற்குத் தூக்கிச் சென்று, அங்கேயே பாலியல் வல்லுறவு செய்துள்ளார். சிறுமி காணாமல் போனது குறித்து அவரது இளைய சகோதரி தெரிவித்ததைத் தொடர்ந்து சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் முதியவர் பாலியல் வல்லுறவு செய்தது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் நம்முடன் இருக்கிறார்," என்று காவல் ஆய்வாளர் வள்ளி தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget