Crime : செஞ்சி: வீடு புகுந்து திருடிய 3 வாலிபர்கள் கைது: 16 பவுன் நகைகள், LED டி.வி பறிமுதல் - சிக்கியது எப்படி?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீடு புகுந்து திருடிய 3 வாலிபர்கள் கைது 16 பவுன் நகைகள், எல்இடி டி.வி பறிமுதல்
![Crime : செஞ்சி: வீடு புகுந்து திருடிய 3 வாலிபர்கள் கைது: 16 பவுன் நகைகள், LED டி.வி பறிமுதல் - சிக்கியது எப்படி? Crime 3 youths arrested for breaking into a house near Senchi 16 pounds of jewellery, LED TV seized Crime : செஞ்சி: வீடு புகுந்து திருடிய 3 வாலிபர்கள் கைது: 16 பவுன் நகைகள், LED டி.வி பறிமுதல் - சிக்கியது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/24/b10501c1331907f22f3dfc3047d58ef81663986802671194_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரசிங்கனூர் கிராமத்தை சோ்ந்தவர் ஜெயராஜ் மகன் டான்கேரேஜ் (வயது 30). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீ்ட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். பின்னா் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள், 2 எல்.இ.டி. டி.வி.கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். டான்கேரேஜ் திருட்டு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் ஆளித்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் கஞ்சனூர் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கஞ்சனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் மற்றும் காவலர்கள் லட்சுமி நாராயணன், திருநாவுக்கரசு, செல்லப்பன், ஜெகதீசன் ஆகியோர் அனந்தபுரம் கூட்டுரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரனையில் திருட்டில் அவர்கள் ஈடுபட்டிருந்ததும் நகைகள் மற்றும் டி.வி.க்களை கொள்ளை அடித்ததும் தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்ட இவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த வீரப்பன் மகன் அருள்ராஜ் (வயது 25,) பயத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமு 24, குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் நல்லசிவம் 20 என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவர்களிடமிருந்து 16 பவுன் நகைகள் மற்றும் இரண்டு எல்இடி டி.வி.க்களை கைப்பற்றினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)