மேலும் அறிய
Crime: பண்ருட்டியில் காரில் கடத்தப்பட்ட 18 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
விசாரணையில் மாதவன், நதிஷ் இருவரும் சென்னையிலிருந்து சட்ட விரோதமாக கஞ்சா கடத்திச் சென்று திருச்சி மற்றும் கும்பகோணம் பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிய வந்தது.
பண்ருட்டியில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையின் போது காரில் கடத்திச் செல்லப்பட்ட 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து காவல்துறையினர் சென்னை சாலை பூங்குணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு சுமார் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.
இதையத்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட திருச்சி இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த மாதவன்(22), நதிஷ் (31) மற்றும் கார் ஓட்டுநர் அண்ணாதுரை (57) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் மாதவன், நதிஷ் இருவரும் சென்னையிலிருந்து சட்ட விரோதமாக கஞ்சா கடத்திச் சென்று திருச்சி மற்றும் கும்பகோணம் பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிய வந்தது.
கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும்18 கிலோ கஞ்சா ஆகியவைகளை பறிமுதல் செய்து மாதவன் நதீஷ் ஆகிய இருவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கார் ஓட்டுநர் அண்ணாதுரையிடும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion