மேலும் அறிய

கருத்தரிப்பு... கருக்கலைப்பு... கொலை மிரட்டல்: காதலியை கழற்றிவிட்ட நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை!

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோருக்கு தலா 2 ஆண்டுகள் தண்டனையும் விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணலூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 57). இவரது மகன் பிரபு (25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். மேலும் இளம்பெண்ணின் வீட்டில் பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில், பிரபு அங்கு சென்று அந்த பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார்.

இதை அறிந்த இளம்பெண், பிரபுவிடம் சென்று தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறினார். அதற்கு பிரபு, தான் வேலை இல்லாமல் இருப்பதாகவும், வேலை கிடைத்தவுடன் உடனே திருமணம் செய்து கொள்வதாகவும், தற்போது கருவை கலைத்துவிடுமாறும் கூறி கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்துள்ளார்.  இதை நம்பிய இளம்பெண், மாத்திரையை அவரிடம் வாங்கி சாப்பிட்டு, கருக்கலைப்பு செய்தார். இதையடுத்து பிரபுவுக்கு நீதிமன்றத்தில் நிரந்த ஊழியர் வேலை கிடைத்தது. இதுபற்றி அறிந்த இளம்பெண், தனது குடும்பத்தினருடன் பிரபு வீட்டுக்கு சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.


கருத்தரிப்பு... கருக்கலைப்பு... கொலை மிரட்டல்: காதலியை கழற்றிவிட்ட நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை!

அதற்கு பிரபு மற்றும் அவரது பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து, அந்த இளம்பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்தனர். திருமணத்திற்கு மறுத்ததால் மனவேதனையடைந்த அந்த இளம்பெண், 19.6.2017 அன்று விஷம் குடித்து தற்கொலை முயன்றார்.  இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி அறிந்த பிரபு மற்றும் அவரது பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை சந்தித்து, விரைவில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகவும், இதுதொடர்பாக போலீசில் புகார் ஏதும் கொடுக்க வேண்டாம் எனவும் கூறினர். இதை உண்மை என்று நம்பிய இளம்பெண் போலீசில் புகார் அளிக்கவில்லை.


கருத்தரிப்பு... கருக்கலைப்பு... கொலை மிரட்டல்: காதலியை கழற்றிவிட்ட நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை!

பின்னர் 10.11.2017 அன்று இளம்பெண், தனது தாய் மற்றும் சகோதரியுடன் பிரபு வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து அங்கிருந்த பிரபுவிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் மீண்டும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பிரபு, தனது தந்தை அன்பழகன், தாய் ராஜேஸ்வரி ஆகியோருடன் சேர்ந்து, இளம்பெண்ணின் கழுத்தை நெரித்து மிரட்டல் விடுத்தார்.

மேலும் அவரது தாய் மற்றும் சகோதரியை ஆபாசமாக திட்டினர். 10 ஆண்டு சிறை இது குறித்து அந்த இளம்பெண், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, அன்பழகன், ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

கருத்தரிப்பு... கருக்கலைப்பு... கொலை மிரட்டல்: காதலியை கழற்றிவிட்ட நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை!

அதன்படி நீதிபதி பாலகிருஷ்ணன் தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும், அவருக்கு உடந்தையாக இருந்த அன்பழகன், ராஜேஸ்வரி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையில் ரூ.30 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget