மேலும் அறிய

Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?

Maruti Grand Vitara Hybrid Drawbacks: நாட்டின் மலிவான வலுவான ஹைப்ரிட் எஸ்யுவி ஆன மாருதி க்ராண்ட் விட்டாரா கார் மாடலில் உள்ள குறைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Maruti Grand Vitara Hybrid Drawbacks: மாருதி க்ராண்ட் விட்டாரா கார் மாடலின் தொடக்க விலையானது, ரூ.10.77 லட்சமாக உள்ளது.

மாருதி க்ராண்ட் விட்டாரா

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹைப்ரிட் கார் மாடல்கள் மீதான மோகம் சீராக உயர்ந்து வருகிறது. இதனை உணர்ந்து பல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஹைப்ரிட் மாடல்களை சந்தைப்படுத்த தொடங்கியுள்ளன. ஆக்சிலரேஷனை மேம்படுத்த உதவும் மைல்ட் ஹைப்ரிட் மற்றும் மைலேஜை உயர்த்தக்கூடிய வலுவான ஹைப்ரிட்  என இரண்டு வகையில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மலிவான மற்றும் வலுவான ஹைப்ரிட் அம்சம் கொண்ட கார் மாடலாக, மாருதியின் க்ராண்ட் விட்டாரா திகழ்கிறது. இந்த பிரிவின் விற்பனையிலும் தொடர்ந்து முதன்மையான மாடல்களில் ஒன்றாக உள்ளது. ஆனாலும், இதில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் க்ராண்ட் விட்டாராவில் உள்ள பிரச்னையாக பயனர்களால் குறிப்பிடப்படும் குறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

மாருதி க்ராண்ட் விட்டாரா - முக்கிய குறைபாடுகள்

1. எதிர்பார்த்த செயல்திறன் இல்லாதது

தினசரி பயன்பாடுகளுக்கு உகந்ததாக உள்ளது. ஆனால், டர்போ பெட்ரோல் எடிஷன் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டால் நெடுஞ்சாலைகளில் அதிகப்படியான ஆக்சிலரேஷனில் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்திறன் இல்லை என கூறப்படுகிறது.

2. குறைவான் பூட் ஸ்பேஸ்

காரின் ஃப்ளோருக்கு கீழே ஹைப்ரிட் பேட்டரி இருப்பதால், வெறும் 265 லிட்டர் பூட் ஸ்பேஸ் மட்டுமே கிடைக்கிறது. அதிகப்படியான உடைமைகளுடன் குடும்பத்துடன் வெளியூர் செல்ல விரும்புவோருக்கு இது சிரமத்தை ஏற்படுதக்கூடும். 

3. இன்ஜின் சத்தம்

ஆக்சிலரேஷனை தீவிரமாக பயன்படுத்தும்போது 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினில் அதிகப்படியான சத்தம் ஏற்படுவதாக கூறப்படுகிறது

4. உட்புற தரத்தில் சமரசம்

நல்ல செயல்திறன் மற்றும் நீடித்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதான போட்டியாளர்களை போன்று உட்புற அம்சங்கள் மற்றும் வசதிகளில் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை.

5. ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷன் இல்லை

மைல்ட் ஹைப்ரிட் பெட்ரோல் எடிஷனில் மட்டுமே ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷன் இருப்பது மிகப்பெரிய குறைபாடாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Cheapset Sedan: நாட்டின் மலிவான செடான் - 28KM மைலேஜ், 4 ஸ்டார் ரேட்டிங் , கூபே டிசைன் - EMI விவரங்கள்

யாருக்கு மாருதி க்ராண்ட் விட்டாரா பொருந்தாது?

  • வேகமான ஆக்சிலரேஷன், ஸ்போர்டியாக கையாளும் திறன், சீரான இடைவெளியில் ஓவர்டேக் செய்யும் வகையில் வேகத்தை உயர்த்துவது விரும்புவோருக்கு க்ராண்ட் விட்டாரா பொருந்தாது
  • அதிகப்படியான இடவசதி விரும்புவ்போருக்கு க்ராண்ட் விட்டாரா நிச்சயம் பொருந்தாது
  • மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் வகையை விட ஸ்ட்ராங்-ஹைப்ரிட் வகையின் விலை கணிசமாக அதிகம். உங்கள் ஆண்டு வாகனப் பயன்பாடு குறைவாக இருந்தால், எரிபொருள் சேமிப்பு மூலம் அந்த விலை வித்தியாசத்தை ஈடுசெய்ய பல ஆண்டுகள் ஆகலாம்
  • நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான பயணம் மணிக்கு 100–120 கி.மீ வேகத்தில் இருந்தால், ஹைப்ரிட் செயல்திறனின் நன்மை குறைகிறது. ஓவர்டேக் செய்யும்போது அதன் இயல்பான இன்ஜின் குறைவான செயல்திறனுடன் இயங்குவது போல் உணரப்படலாம்.
  • ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் விருப்பத்தில் மட்டுமே கிடைக்கிறது. மலைப்பாங்கான நிலப்பரப்பு, சேற்றுச் சாலைகள் அல்லது அவ்வப்போது மேற்கொள்ளும் கரடுமுரடான பாதைகளில் உங்களுக்குக் கூடுதல் இழுவிசை தேவைப்பட்டால், நீங்கள் வேறு ஒரு ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • க்ராண்ட் விட்டாராவின் உட்புறம் வசதியாகவும் சிறப்பான அம்சங்களைக் கொண்டதாகவும் இருந்தாலும், இதன் போட்டியாளர்கள் கூடுதல் பிரீமியம் தோற்றத்தையும் உணர்வையும் வழங்குகின்றன.
  • நான்கு பெரியவர்கள், சாமான்கள் அல்லது மேடு பள்ளமான நிலப்பரப்பில் பயணிக்கும்போது, ​​இந்த ஹைப்ரிட் வாகனம் முழுமையான இழுவை சக்தியை விட செயல்திறனுக்கே முன்னுரிமை அளிக்கிறது. நீங்கள் அடிக்கடி முழுச் சுமையுடன் பயணம் செய்பவராக இருந்தால், ஒரு டர்போ-பெட்ரோல் அல்லது டீசல் எடிஷன் நல்ல தேர்வாக இருக்கும்
  • பட்ஜெட் குறைவாக இருந்தால் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வாகனத்திற்கான கூடுதல் கட்டணம் நிதி ரீதியாகச் சரியாக இருக்காது.


Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?

மாருதி க்ராண்ட் விட்டாராவின் மாற்று ஆப்ஷன்கள்

க்ராண்ட் விட்டாராவுடன் ஒப்பிடுகையில் அதன் குறைபாடுகள் அடிப்படையில் இந்திய சந்தையில் பல மாற்றும் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அதன்படி, ஹைப்ரிட் தொழில்நுட்பம் அடிப்படையில் டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடரும், ஒட்டுமொத்த குடும்ப எஸ்யுவி ஆக ஹுண்டாய் க்ரேட்டாவும், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வசதிகள் அடிப்படையில் கியா செல்டோஸ் மாடலும், இடவசதி மற்றும் நம்பகத்தன்மை அடிப்படையில் ஹோண்டா எலிவேட்டும் மற்றும் சிறந்த பயண அனுபவங்கள் அடிப்படையில் ஃபோக்ஸ்வாகன் டைகனும் நல்ல மாற்று ஆப்ஷன்களாக உள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget