மேலும் அறிய

ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் கொலை குற்றவாளி.. பதற்றத்தில் திண்டுக்கல்... நடந்தது என்ன?

முருகனின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வீரபத்திரன் இன்று தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் - நத்தம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக பிரமுகர் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி மனைவி கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நெடுஞ்சாலையில், திமுக பிரமுகர் 'பாத்ரூம்' முருகன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான வீரபத்திரன் இன்று பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரரும் திமுக பிரமுகருமான 'பாத்ரூம்' முருகன், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் காரில் கடத்தப்பட்டு ஓடும் காரிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆளும் கட்சியைச் சேர்ந்த நபர் கொலை செய்யப்பட்டதால் அப்போது இந்த சம்பவம் அப்போது பெரும் பேசுபொருளாக மாறியது. 

இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் கணக்கு வழக்கு விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்தது என கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் முருகனின் கார் ஓட்டுநர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், அவர்கள் அனைவரும் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர்.

​இந்நிலையில், முருகனின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வீரபத்திரன் இன்று தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் - நத்தம் நெடுஞ்சாலை நொச்சி ஓடைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவரை காரில் வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று பைக் மீது மோதியுள்ளது. இதில் கணவன், மனைவி இருவரும் கீழே விழுந்தனர். வீரபத்திரன் எழுந்து சுதாரிப்பதற்குள் மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் வைத்து வைத்து அவரை மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த வீரபத்திரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 

இத்தாக்குதலின் போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அவரது மனைவி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் வீரபத்திரன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், புறநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மஞ்சிமா தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். ​இந்நிலையில், கொலையாளிகள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய ஸ்கார்பியோ காரை பறிமுதல் செய்த போலீசார் அதிலிருந்த பயங்கர ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். 

திமுக பிரமுகர் முருகன் கொலை செய்யப்பட்டதற்குப் பழிக்குப் பழியாக இந்தச் சம்பவம் அரங்கேற்றப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

விசிக பிரமுகர் கொலை வழக்கு! இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்ததால் சிக்கிய 9 பேர்! பகீர் பின்னணி!
விசிக பிரமுகர் கொலை வழக்கு! இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்ததால் சிக்கிய 9 பேர்! பகீர் பின்னணி!
மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!
மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
"பணத்தை கொடு...வெளியே சொன்னா வெட்டுவோம்" – டீ கடையில் அரங்கேறிய திகில் சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
Embed widget