மேலும் அறிய

70 வயதில் மனைவி தேடிய முதியவர்; வாண்ட்டடா வந்து வாரி சுருட்டிய 49 வயது மணமகள்!

திருமண தகவல் மையம் மூலம் 70 வயது முதியவரை திருமணம் செய்து கொள்வதாக நூதன முறையில் ஏமாற்றி அவரது வீட்டில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்ற 49 வயது பெண்ணை காவல்துறையினர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம்  நகராட்சி செங்குந்தர் 8வது தெருவில்  வசித்து வருபவர் கோவிந்தசாமி. 70 வயதான கோவிந்தசாமியும், அவரது மனைவி வசந்தாவும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார்.

கோவிந்த சாமிக்கு இரண்டு மகள்கள், ஒருமகன் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மனைவியை இழந்து வயதான காலத்தில்  தனியாக வசித்து வந்துள்ளார். திடீரென தன்னை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், தனக்கு துணையாக யாரவது வேண்டும் என முடிவெடுத்து.  துணைத் தேடி திருமண தகவல் மையம் சென்றிருக்கிறார்.

70 வயதில் மனைவி தேடிய முதியவர்; வாண்ட்டடா வந்து வாரி சுருட்டிய 49 வயது மணமகள்!

திருமண மையத்தில் வரன் வேண்டும் என கேட்டுள்ளார். அவர்கள் முதியவரை பார்த்து பேரனுக்கா?பேத்திக்கா? யாருக்கு வரன் பார்க்கணும். என்று திருமணம் தகவல் மையத்தினர் கேட்க, தனக்குத்தான் பெண் பார்க்கணும் என்று முதியவர் கூறினர். அதிர்ந்து போன திருமண தகவல் மையத்தினர், இதுவரையில் நாங்கள் இதுபோன்று வரன் பார்த்ததில்லை, இருந்தாலும் தங்கள் வேலையை செய்வோம் ,என்று கூறி முதியவரிடம் இருந்து புகைப்படம் மற்றும் விபரங்களுடன் விளம்பரம் செய்தனர். 

சில நாட்கள் கழித்து, தகவல் மையத்தினர் உங்களுக்கு சீர்காழியை சேர்ந்த 49 வயது விஜயசாந்தி என்பவர் தங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் என்று கூறியுள்ளனர். கோவிந்தசாமியிடம் பெண்ணின் செல்போன் நம்பர் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் விஜயசாந்தியிடம் செல்போனில் அவர் பேசியிருக்கிறார்.

70 வயதில் மனைவி தேடிய முதியவர்; வாண்ட்டடா வந்து வாரி சுருட்டிய 49 வயது மணமகள்!

அதனைத்தொடர்ந்து விஜயசாந்தியே, கோவிந்தசாமியின் வீட்டிற்கு மாப்பிள்ளை பார்க்க வந்துள்ளார். மாப்பிள்ளை பார்த்துவிட்டு உடனே செல்லாமல், இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்துள்ளார். வீடடில் தங்கி எங்கெல்லாம் நகை, பணம் உள்ளது என நோட்டமிட்டுள்ளார். பின்னர் கோவிந்தசாமியிடம் என்னுடைய கணவர் விவாகரத்து செய்து இருந்தேன். விவாகரத்து நோட்டீஸ் எடுத்துக் கொண்டு வந்துள்ளார் என கூறி அங்கிருந்து புறப்பட்டு உள்ளார். மீண்டும் கோவிந்தசாமி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கோவிந்தசாமி அசந்த நேரம் பார்த்து , கோவிந்தசாமியின் மனைவி போட்டோவில் மாட்டி வைத்திருந்த 9 பவுன் தாலி செயினை திருடிச் சென்றார். சிறிது நேரம் கழித்து விசயம் அறிந்து, விஜயசாந்தியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால்  சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. அவரது ஊரையும் பொய் சொல்லி ஏமாற்றியிருக்கிறார் என்பது பின்னர் தெரியவந்தது.  இதனால் ஏமாந்து போய்விட்டதை மகள்களிடம் சொல்லி புலம்பியிள்ளார் கோவிந்தசாமி.

70 வயதில் மனைவி தேடிய முதியவர்; வாண்ட்டடா வந்து வாரி சுருட்டிய 49 வயது மணமகள்!

இந்த நிலையில் கடந்த 12ம் தேதி அன்று சின்னசேலம் பேருந்து நிலையத்தில் கோவிந்தசாமி தன் மகள்களுடன் நின்றிருந்தபோது எதார்த்தமாக அங்கே வந்த விஜயசாந்தி கோவிந்தசாமியிடம் சிக்கினார். அதன் பின்னர் அருகில்  இருந்த போலீசாரிடம் புகார் தெரிவிக்க, விஜயசாந்தியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

தலைப்பு செய்திகள்

kallakurichi : பேய் என்ற பெயரில் மாணவிக்கு கொடூர சித்ரவதை! கற்பூரம், துடைப்பத்தால் தாக்கிய சக மாணவிகள்
kallakurichi : பேய் என்ற பெயரில் மாணவிக்கு கொடூர சித்ரவதை! கற்பூரம், துடைப்பத்தால் தாக்கிய சக மாணவிகள்
சிஎம் விஜய் பெயரில் ‘AI Deep Fake’ வீடியோ.! யார் அந்த குற்றவாளி- ராஜஸ்தானில் தட்டி தூக்கிய போலீஸ்
சிஎம் விஜய் பெயரில் ‘AI Deep Fake’ வீடியோ.! யார் அந்த குற்றவாளி- ராஜஸ்தானில் தட்டி தூக்கிய போலீஸ்
சாக்கு மூட்டையில் பெண் சடலம் !! 3 நாட்களாக பிணத்துடன் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர்
சாக்கு மூட்டையில் பெண் சடலம் !! 3 நாட்களாக பிணத்துடன் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர்
பூம்புகார் கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்? மீனவர் வாழ்வாதாரத்திற்குப் பேராபத்து!
பூம்புகார் கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்? மீனவர் வாழ்வாதாரத்திற்குப் பேராபத்து!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
தமிழகத்தில் நாளை கனமழை: நீலகிரி, கோவை உட்பட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை கனமழை: நீலகிரி, கோவை உட்பட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?
இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?
US Weapons in Orbit: “நாங்க வானத்துலயே வெடி வச்சுருக்கோம்டா.!“ சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள விண்ணில் ஆயுதங்கள்; US பரபரப்பு தகவல்
“நாங்க வானத்துலயே வெடி வச்சுருக்கோம்டா.!“ சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள விண்ணில் ஆயுதங்கள்; US பரபரப்பு தகவல்
Pakistan Saudi Israel: போட்டு சாத்தும் ஹவுதிக்கள்; கைவிட்ட பாகிஸ்தான்; இஸ்ரேலை உதவிக்கு அழைக்கும் சவுதி; நடப்பது என்ன.?
போட்டு சாத்தும் ஹவுதிக்கள்; கைவிட்ட பாகிஸ்தான்; இஸ்ரேலை உதவிக்கு அழைக்கும் சவுதி; நடப்பது என்ன.?
Honda Shine 125 on EMI: ரூ.10,000 தான் முன்பணம்.! இந்தியாவின் சேல்ஸ் டாப்பர் ஹோண்டா ஷைன் 125 பைக் வாங்க EMI எவ்வளவு வரும்.?
ரூ.10,000 தான் முன்பணம்.! இந்தியாவின் சேல்ஸ் டாப்பர் ஹோண்டா ஷைன் 125 பைக் வாங்க EMI எவ்வளவு வரும்.?
Embed widget