மேலும் அறிய

Crime: கோவையில் போலி தங்கக்கட்டிகள், ரூபாய் நோட்டுகள் பறிமுதல் - போலீசார் தீவிர விசாரணை

வீட்டில் இருந்த போலி தங்க கட்டிகள் மற்றும் ஒரு புறம் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், 3 ரப்பர் ஸ்டாம்பு, துப்பாக்கி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஹரேந்திரன் என்ற எர்வின் எவின்ஸ். 49 வயதான இவர் ஹோமியோபதி டாக்டர் எனக் கூறி கோவை வெள்ளலூர் ராமசாமி கோனார் நகரில் உள்ள தங்கராஜ் என்பவரது வீட்டை, கடந்த 45 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தலையோலபறம்பு காவல் துறையினர் ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக திருப்பூரில் வைத்து எர்வினை கைது செய்தனர். பின்னர் கேரள மாநிலத்திற்கு அவரை அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் தங்கராஜ் எர்வின் எவின்ஸ் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த போலி தங்க கட்டிகள் மற்றும் ஒரு புறம் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், 3 ரப்பர் ஸ்டாம்பு,  துப்பாக்கி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தங்கராஜ், “கடந்த 45 நாட்களுக்கு முன்பு எர்வின் ஏவின்ஸ் வாடகைக்கு வந்தார். அவரிடம் உங்களது மனைவி, குழந்தைகள் எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்னர் வருவார்கள் என்று கூறினார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை காணவில்லை என என்னிடம் கூறினார். 


Crime: கோவையில் போலி தங்கக்கட்டிகள், ரூபாய் நோட்டுகள் பறிமுதல் - போலீசார் தீவிர விசாரணை

அதற்கு நான் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறிய போது, அதற்கு அவர் வேண்டாம் என கூறிவிட்டார். மேலும் அவர் தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்ப்பதாக கூறினார். வீட்டிற்கு எப்போது வருகிறார் போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்” என தெரிவித்துள்ளார். இதனையடுத்து போத்தனூர் காவல் துறையினர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட போலி தங்க கட்டிகள் துப்பாக்கி ஒரு பக்கம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எர்வினுக்கு எப்படி வந்தது? அவர் உண்மையிலேயே டாக்டர் தானா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எர்வினை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Embed widget