மேலும் அறிய

கோவையில் ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்? - மாநகர துணை காவல் ஆணையர் விளக்கம்

”மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தவுடன் சுட துவங்கி விட்டார். தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் சுட்டதில் சஞ்சய்ராஜா காலில் குண்டு பாய்ந்தது”

கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சத்திய பாண்டி. 32 வயதான இவர், டிரைவராக பணி புரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 12 ம் தேதியன்று இரவு நவ இந்தியா பகுதியில் இருந்து ஆவராம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு இளநீர் கடைக்கு அருகே தனது நண்பர்களுடன் சத்திய பாண்டி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் தலைகவசம் அணிந்தபடி, 2 மோட்டர் சைக்கிளில் வந்தனர். அந்த கும்பல் அங்கு நின்று கொண்டிருந்த சத்திய பாண்டியை திடீரென அரிவாளால் வெட்டினர். இதனால் அச்சம் அடைந்த சத்திய பாண்டி உயிர் பிழைக்க அங்கிருந்து ஓடத் துவங்கினார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்தி சென்றது. இதையடுத்து அக்கும்பலிடம் இருந்து தப்பிக்க சத்திய பாண்டி சாலையோரம் இருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் விரட்டி சென்று அந்த வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் சத்திய பாண்டிக்கு தலை, கை, கால், உடல் என 20 க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டி விழுந்தது. மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சத்திய பாண்டி துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக காஜா உசேன் (23), சஞ்சய் குமார் (23), ஆல்வின் (37), சல்பர் கான் (22) ஆகிய 4 பேர் அரக்கோணம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சஞ்சய் ராஜா என்பவர் எழும்பூர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இவர்களில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கபட்ட சஞ்சய் ராஜாவை கோவை அழைத்து வந்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. அவரிடம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கோவையில் ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்? - மாநகர துணை காவல் ஆணையர் விளக்கம்

இந்நிலையில் சஞ்ஜய்ராஜா கொலைக்கு பயன்படுத்திய கை துப்பாக்கியை எடுத்து தருவதாக காவல் துறையினரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் பந்தய சாலை காவல் துறையினர் கரட்டுமேடு முருகர் கோயில் வடபுரம் உள்ள மலை சரிவிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்த ஆய்வாளர் கிருஷ்ண லீலாவை நோக்கி ஒரு குண்டு சுட்டதாகவும், நொடி பொழுதில் ஆய்வாளர் கிருஷ்ணலீலா தன்னை தற்காத்துக் கொள்ள அருகில் இருந்த மரத்தின் பின்பு மறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மீண்டும் ஒரு குண்டு அவரை நோக்கி உன்னை கொள்ளாமல் விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டு கொலைவெறியுடன் சுட்டதாகவும், அப்போது உதவி ஆய்வாளர் சந்திரசேகர் சஞ்சய்ராஜாவின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் ஏற்பட்ட சஞ்சய் ராஜா துப்பாக்கியை கீழே போட்டுள்ளார். பின்னர் சஞ்சய் ராஜா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஸ் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் பேட்டியளித்த அவர், “இன்று காலை சஞ்சய் ராஜாவை கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை இந்த பகுதிக்கு அழைத்து வந்தனர். சஞ்சய்ராஜாவிடம் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாக விசாரணையில் சொல்லியிருந்தார். ஏற்கனவே ஒரு துப்பாக்கி சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாவது துப்பாக்கியை பறிமுதல் செய்ய இங்கே அழைத்து வந்தனர்.

கோவையில் ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்? - மாநகர துணை காவல் ஆணையர் விளக்கம்

இந்த பகுதியில் மறைத்து வைத்திருந்ததாக சொன்னதால் பறிமுதல் செய்ய அவரை அழைத்து வந்தனர். இந்த துப்பாக்கி நாட்டுத் துப்பாக்கியை போல இருக்கிறது. மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தவுடன் சுட துவங்கி விட்டார். தற்காப்பிற்காக உதவி ஆய்வாளர் சுட்டதில் சஞ்சய்ராஜா காலில் குண்டு பாய்ந்தது. அவர் பத்து நிமிடத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். தற்போது நல்ல நிலையில் இருக்கின்றார்.

காவல் துறையினரை அவர் குறிவைத்து சுட்டார். நல்வாய்ப்பாக தப்பி விட்டனர். சஞ்சய் ராஜா மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் இருக்கிறது. துப்பாக்கி எங்கு வாங்கினார் என்பது குறித்து விசாரித்த பொழுது பீகார், ஒரிசா என சொல்லி இருக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.கோவையில் துப்பாக்கி கலாச்சாரம் கிடையாது. இவர் அதை செய்து வந்து இருக்கின்றார். இந்த துப்பாக்கி நாட்டு துப்பாக்கியை போலவே இருக்கிறது. இன்னொரு துப்பாக்கி சற்று மாறுதலாக இருக்கிறது. அதை ஆய்வுக்கு அனுப்பினால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். இவை சட்ட விரோதமான துப்பாக்கிகள், துப்பாக்கியில் எவ்வளவு குண்டுகள் இருக்கிறது என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
EPS: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!
Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman AIIMS Controversy : ’’தற்குறி.. உளறாதே!’’கட்சியை காப்பாத்திக்கோ’’ சீமானை விளாசிய  திமுகPriyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்Pawan Kalyan on Udhayanidhi : VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
EPS: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!
Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!
Breaking News LIVE OCT 4: அடுத்த ஹிஸ்புல்லா தலைமை கொல்லப்பட்டதாக தகவல். லெபனானில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE OCT 4: அடுத்த ஹிஸ்புல்லா தலைமை கொல்லப்பட்டதாக தகவல். லெபனானில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
Embed widget