மேலும் அறிய

திருமணத்தை மீறிய உறவு.. இடையூறாக நினைத்து கணவருக்கு பெண் செய்த கொடூரம்..

அறையில் படுத்து இருந்த பிரபுவை அறையில் இருந்த காட்டன் துண்டு மூலம் கழுத்தை இறுக்கி கொலை செய்து உள்ளார்.

கோவை வடவள்ளி அருகே உள்ள இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பிரபு - லாவண்யா தம்பதி. இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்குப் 7 ம் வகுப்பு படிக்கும் 12 வயது மகன் மற்றும் யூ.கே.ஜி. படிக்கும் 5 வயது மகன் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பிரபு காளப்பநாயக்கன்பாளையம் பிரிவில் லேத் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்து உள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் கவுண்டம்பாளையத்தில் செந்தில் என்பவரின் லேத் ஒர்க் ஷாப்பிற்கு வேலைக்கு சென்று வந்தார். இதனிடையே கடந்த பத்து நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் பிரபு வீட்டில் இருந்து வந்து உள்ளார். பிரபுவின் மனைவி லாவண்யா கே.என்.ஜி புதூரில் பேக்கரி மற்றும் உணவகத்தை கடந்த 9 மாதமாக நடத்தி வருகிறார். அப்போது கர்நாடகாவை சேர்ந்த பைரே கவுடா என்பவர் லாவண்யா நடத்தி வரும் டீ கடைக்கு அருகே உள்ள எல்&டி பைப் கம்பெனியில் ஓட்டுனராக பணி புரிந்து வந்து உள்ளார்.

கொலை முயற்சி

இந்நிலையில் அடிக்கடி லாவண்யாவின் கடைக்கு டீ மற்றும் டிபன் சாப்பிட வந்த போது, லாவண்யாவுடன் பைரே கவுடாவிற்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இதனால் உணவகத்தில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பைரே கவுடாவும், லாவண்யாவும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது, கணவட் பிரபு உயிருடன் இருப்பது இடையூறாக உள்ளதாக கருதி கடந்த 15 நாட்களுக்கு முன்பு இடையர்பாளையம் பகுதியில் உள்ள டி.வி.எஸ் நகரில் ஸ்டேஷனரி கடையில் எலி பேஸ்ட் 3 வாங்கிக் லாவண்யாவிடம் கொடுத்து உள்ளார். அதை எடுத்துச் சென்ற லாவண்யா அவரது கணவரான பிரபுக்கு எலி பேஸ்ட் ஒன்றை சாம்பாரில் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார். ஆனால் அதில் பிரபு இறக்காமல் உயிர்த்தப்பினார்.  

கழுத்தை இறுக்கி கொலை

இதன் காரணமாக வயிற்று வலியால் கடந்த 10 நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இடையார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று லாவண்யா தொலைபேசி மூலம் பைரே கவுடாவிற்கு வீட்டில் யாரும் இல்லை என்ற தகவலை கூறி உள்ளார். பிற்பகல் பைரே கவுடா அவரது இரண்டு சக்கர வாகனத்தில் பிரபுவின் வீட்டிற்கு சென்று உள்ளார். வீட்டிற்கு சென்ற அவர் மேல் அறையில் படுத்து இருந்த பிரபுவை அறையில் இருந்த காட்டன் துண்டு மூலம் கழுத்தை இறுக்கி கொலை செய்து உள்ளார். கொலை செய்த பின் பிரேதத்தை பெட்ஷீட்டில் மூடிய பின் லாவண்யாவுக்கு தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். தகவலை அறிந்த லாவண்யா அடுத்த 15 நிமிடத்தில் அவரது வீட்டிற்கு வந்து உள்ளார்.

காவல் துறையினர் விசாரணை

வீட்டிற்கு வரும் பொழுது பைரே கவுடாவும் இருந்து உள்ளார். நீ உடனே புறப்பட்டு செல் நான் பார்த்துக் கொள்கிறேன் என பைரே கவுடாவிடம் கூறி உள்ளார். பின்பு தனது கணவர் உடல் அசைவின்றி இருப்பதாக தனது உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். அவர்கள் இறந்த பிரபுவின் உடலை எடுத்துக் கொண்டு ஆட்டோ மூலம் இடையர்பாளையத்தில் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்து உள்ளனர். தனியார் ஆம்புலன்ஸ்  மூலம் பிரபுவின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து வடவள்ளி காவல் துறையினருக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் விசாரணையில் லாவண்யா, பைரே கவுடா உடன் சேர்ந்து பிரபுவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ரூ.1 லட்சம் சம்பளம், பர்சனல் செகரட்டரி வேலை! நம்பி வந்த கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: கடலூர் தொழிலதிபர் அதிரடி கைது!
ரூ.1 லட்சம் சம்பளம், பர்சனல் செகரட்டரி வேலை! நம்பி வந்த கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: கடலூர் தொழிலதிபர் அதிரடி கைது!
நெஞ்சில் திக்.. திக்.. நடுரோட்டில் பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு: தொழில்நுட்பத்தால் சிக்கிய கொள்ளையர்கள்!
நெஞ்சில் திக்.. திக்.. நடுரோட்டில் பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு: தொழில்நுட்பத்தால் சிக்கிய கொள்ளையர்கள்!
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!
மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
Embed widget