மேலும் அறிய

Crime: கோவையில் தொடரும் கஞ்சா வேட்டை - தந்தை, மகன் உட்பட 5 பேர் கைது

இதுவரை 77 நபர்கள் மீது 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 95.58 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில், கோவை மாவட்ட காவல் துறையினர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் தாத்தூர் பிரிவு அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷஹாபுதீன் (50) மற்றும் அவரது மகன் ஆரிஃப் ராஜா(20) ஆகியோரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்களிடமிருந்து 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 3 கிலோ 100 கிராம் கஞ்சா சாக்லேட்டை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

6 கிலோ கஞ்சா பறிமுதல்


Crime: கோவையில் தொடரும் கஞ்சா வேட்டை - தந்தை, மகன் உட்பட 5 பேர் கைது

இதேபோல கோவை மாவட்டம் சோமனூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் காவல் துறையினர் சோமனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோபி (27) , சக்திவேல் (26) மற்றும் ஐகோர்ட் மகாராஜன்(22) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 6 கிலோ 300 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

காவல் துறை எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2024 முதல் தற்போது வரை காவல் துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 77 நபர்கள் மீது 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 95.58 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Aadi Perukku holiday Bus : ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
Dhanush : ‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Embed widget