மேலும் அறிய
Advertisement
Crime : சென்னையில் பயங்கரம்.. சினிமா பைனான்சியரிடம் இடம் வேலை.. அவரிடமே மோசடி: அடித்துக்கொன்ற கொடூரம்.. சிக்கிய துணை நடிகர்..!
நொளம்பூரில் சினிமா பைனான்சியரிடம் வேலை செய்து கொண்டே மோசடி செய்தவரை அடித்து கொன்று குப்பை மேட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை
வீட்டில் வைத்து சித்ரவதை
சென்னை மதுரவாயல் அடுத்த நொளம்பூர், எஸ்.அண்ட்.பி கார்டன் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(என்ற)சோட்டா வெங்கட்(48), சினிமா படங்களுக்கு பைனான்ஸ் விடுவது மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரது வீட்டில் ஒருவரை அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்வதாகவும் , அலறல் சத்தம் அதிகளவில் கேட்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலையடுத்து நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வீட்டில் இருந்தவர்கள் தலைமறைவானதும் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் மட்டும் ரத்தக்கரைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
நைசாக பேசி சரண் அடைய வைத்த போலீஸ்
இதையடுத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தலைமறைவான சினிமா பைனான்சியர் வெங்கட்ராமன், நலம்பூர் இன்ஸ்பெக்டருக்கு தெரிந்த நபர் என்பதால், அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது தன்னிடம் பணிபுரியும் மதுரவாயலை சேர்ந்த கோபி (என்ற) நவீன்(47), சரவணன்(என்ற) கணபதி(29), திலீப்(30), ஆகிய நான்கு பேரும் சேர்ந்து தன்னிடம் வேலை செய்து கொண்டு தன்னை ஏமாற்றிய பாபுஜி (50), என்பவரை கொலை செய்து விட்டதாக கூறி நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். மேலும் பாபுஜி உடலை போரூர் அடுத்த கொளப்பாக்கம், விமான நிலையம் பின்பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் வைத்து எரித்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
திடுக்கிடும் தகவல்
இதையடுத்து கோயம்பேடு உதவி கமிசனர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார் மாங்காடு போலீசாருடன் இணைந்து சென்று சம்பவ இடத்தில் சென்று பார்த்தபோது உடல் முழுவதும் எரிந்து கருகிய நிலையில் இருந்த பாபுஜியின் உடலை மீட்டு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது இதுகுறித்து போலீஸ் விசாரணையில் கூறியதாவது, சினிமா பைனான்சியரான வெங்கட்ராமனிடம், சிலர் கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் பாபுஜி கலெக்சன் ஏஜென்டாக சில மாதங்கள் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக பாபுஜி கலெக்சன் பணம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும் அவரது வீட்டில் இருந்த அவரது மகளின் சுமார் ஐந்து பவுன் நகைகள் விலை உயர்ந்த செல்போனையும் எடுத்து சென்றுள்ளார். அதுமட்டுமின்றி வெங்கட்ராமன் குறித்து பல்வேறு இடங்களில் அவதூறாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வெங்கட்ராமனிடம் இருந்து அவரது நண்பரான சினிமா பைனான்சியர் கோபால்(35), என்பவரிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார் அங்கும் பாபுஜி பண மோசடி செய்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் பாபுஜி திடீரென தலைமறைவானார்.
அவதூறாக பேசியதால் தாக்கியுள்ளார்
இதை எடுத்து பாபுஜியை தீவிரமாக இரு தரப்பினரும் தேடி வந்த நிலையில் இவர்களுக்கு நண்பரான நவீன் மூலமாக பாபுஜியை பிடிக்க வலை விரித்துள்ளனர். தலைமறைவாக இருந்த பாபுஜியை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே நவீன் வர வழைத்துள்ளார். கோயம்பேடு வந்த பாபுஜியை அங்கு பதுங்கி இருந்த வெங்கட்ராமன், சரவணன், திலீப், நவீன் ஆகியோர் சேர்ந்து பாபுஜியை காரில் கடத்தி கொண்டு வெங்கட்ராமன் வீட்டின் மாடியில் உள்ள அறையில் வைத்து நகை, பணம் குறித்து கேட்டு இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். மேலும் தன்னைக் குறித்து அவதூறாக பேசிய ஆத்திரத்தில் குடிபோதையில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மயக்கம் அடைந்த பாபுஜியை அப்படியே போட்டுவிட்டு இவர்கள் குடிபோதையில் படுத்திருந்தனர் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது பலமாக தாக்கியதில் பாபுஜி இறந்து போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து யாருக்கும் தெரியாமல் பாபுஜி உடலை காரில் எடுத்து சென்று கொளப்பாக்கம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெட்ரோல் ஊற்றி வைத்து எரித்துவிட்டது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
துணை நடிகரும் கைது
மேலும் நகை, பணம் கையாடல் செய்ததற்காக பாபுஜியை கடத்தி சென்று கொலை செய்தார்களா? அல்லது இந்த கொலைக்கு காரணம் பெண் விவகாரம் ஏதாவது உள்ளதா என பல்வேறு கோணங்களில் கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். முதலில் இந்த வழக்கை நொளம்பூர் போலீசார் விசாரித்த நிலையில் பாபுஜி கடத்தப்பட்ட இடம் கோயம்பேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டு வருவதால் இந்த வழக்கு கோயம்பேடு போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட சரவணன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு இருப்பதும், நவீன் சினிமா துறையில் துணை நடிகராக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
க்ரைம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion