Chennai: லுக்ல வயசு அதிகம்; நான் யூத் - மிஸ் தமிழ்நாடு அழகியை ஏமாற்றி லிவிங் டுகெதர்! சிக்கிய போலீஸ்!
அப்பெண் வசதி படைத்தவர். பெற்றோர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் அவரின் தாய் ஏதோ ஒரு நோயால் இறந்துள்ளார்.
தன்னை இளைஞர் என்று கூறி, மிஸ் தமிழ்நாட்டை ஏமாற்றி லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்த 56 வயதான சிறப்பு உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
சென்னை மேடவாக்கம் அருகே உள்ள சித்தாலப்பாக்கதைச் சேர்ந்தவர் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றவர். சமூகசேவையில் ஆர்வம் கொண்ட இவர், ஓஎம்ஆர் சாலையில் உள்ள படூர் ஊராட்சியில் வீடு ஒன்றை பேங்க் மூலம் வாங்கியுள்ளார். அதன்பிறகு, அந்த வீட்டின் மீது ஏற்கெனவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில். சமூகசேவையில் ஈடுபட்டிருந்த காலத்தில் அவருக்கு அறிமுகமான கால்டுவெல் தன் நிலைமை குறித்து கூறி புலம்பியுள்ளார். கால்டுவெல் அந்தப் பெண்ணிடம் தன்னை சிறப்பு உதவி ஆய்வாளர் என்று கூறிக்கொண்டு அறிமுகமானதால், அவரை நம்பி அப்பெண் தனக்கு உதவுமாறு கூறியுள்ளார். தன்னை ஏமாற்றிய பேங்க் மீது வழக்கு தொடர் வக்கீல் ஒருவரை கால்டுவெல் ஏற்பாடு செய்தாராம்.
அப்பெண் வசதி படைத்தவர். பெற்றோர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் அவரின் தாய் ஏதோ ஒரு நோயால் இறந்துள்ளார். வீட்டின் மீது இப்படி ஒரு பிரச்னை, தாய் நோயால் இறப்பு போன்ற காரணங்களால் பெண் மிகவும் சோகத்துடன் மனமுடைந்து காணப்பட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட கால்டுவெல், அப்பெண்ணிடம் உங்கள் வீட்டில் சாத்தான் புகுந்துள்ளதால், இழப்பு ஏற்பட்டதாக கூறி, அதற்கு சிறப்பு ஜெபம் செய்ய வேண்டும் என போதகரை அழைத்துச் சென்றுள்ளார்.
சாத்தனை விரட்டுவதற்கு 40 நாட்கள் வரை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறி சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். இந்த நேரத்தில், நன்றாக பார்த்துக்கொள்வது போல நடித்து அவரை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார். இதனிடையே, இருவரும் காதலிக்க தொடங்கி லிவின் டூ கெதரில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதனிடையே, கால்டுவெல்லுக்கு வயது அதிகமாக இருப்பதாக சந்தேகம் அப்பெண்ணுக்கு வந்துள்ளது. ஆனால், கால்டுவெல்லின் வீட்டார் அவருக்கு 42 வயது தான் ஆகிறது என்றும், வெயிலிலும், வெளியிலும் அலைவதால் வயது அதிகமாக இருப்பது போல தெரிகிறது என்றும் கூறி சமாளித்து, அப்பெண்ணிடம் இருந்த சொத்து பத்திரங்கள், நகைகள், பணங்களை எல்லாம் கைப்பற்றியும், வாடகை வீட்டில் ஒன்றில் அப்பெண்ணை தங்க வைத்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அந்த வீட்டில் இருந்த போது, கால்டுவெல்லின் ஆதார் கார்டை பார்த்த பெண்ணுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவருக்கு 56 வயது என்றும், ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வருவதும் தெரியவந்தது. அந்தப் பகுதிக்கு சென்று விசாரித்தபோது, மேலும் அதிர்ச்சி தகவலாக, மோட்டார் டிரான்ஸ்போர்ட் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆக இருப்பதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, இதுதொடர்பாக கடந்தாண்டு நவம்பரில் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், கடந்த மாதம் 27ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். காரணத்தை கேட்டால், உயரதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மீது புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்