(Source: ECI/ABP News/ABP Majha)
Crime : ”அந்த பொண்ணையும் அசிங்கப்படுத்திட்டாங்க” : பதைபதைக்க வைக்கும் வீடியோ.. ஓட்டுநர் தற்கொலை..
பல்லாவரம் அருகே வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக மனைவி சந்தேகப்பட்டு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் மன உளைச்சல்: பகீர் நிகழ்வு ..
பல்லாவரம் அருகே வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக, மனைவி சந்தேகப்பட்டு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் மன உளைச்சலில் செல்போனில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டு வாக்குமூலம் அளித்து கார் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலணி பகுதியை சேர்ந்த அலாவுதீன்(38) இவருடைய மனைவி சுனிதா கடந்த சில நாட்களாக சுனிதா சந்தேக அடிப்படையில் அலாவுதினுடன் சட்டை போட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன் தினம் வீட்டில் மனைவி சுனிதா ட்யூஷனில் இருந்த மகனை அழைத்து செல்வதற்காக சென்றுவிட்டு வீடு திரும்பிய போது அலாவுதின் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்
இது குறித்து மனைவி சுனிதா சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததின் பேரில் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு பிறகு பிரேதம் ஓப்படைக்கப்பட்டு இறுதி சடங்கும் நடந்தேறியது. இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட அலாவுதீன் செல்போனை சோதனை செய்த போலீசார் அவர் தற்கொலை செய்யும் முன்னர் தனது செல்போனில் தன் சாவுக்கு காரணம் தான் பதினான்கு ஆண்டுகளாக பணி புரிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர்தான். அதே மருத்துவமனையில் பணி செய்யும் பெண் ஒருவருடன் தொடர்புபடுத்தி பேசி, தன் மனைவிக்கு தெரிய வைத்து அதன் மூலமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரித்தபோது காவல் ஆய்வாளர் தரக்குறைவாக பேசியதாகவும், அதுபோல் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் பிரவுன் தாஸ் மற்றும் சக பெண் ஊழியர்கள் பெயரை பதிவு செய்து அவர்கள்தான் காரணம் என வீடியோ பதிவு செய்தது தெரியவந்தது. இந்த வீடியோ அலாவுதீன் குடும்பத்தினர் மூலமாக வெளியே வந்து சமுக ஊடகங்களில் பரவி வருகிறது. தன்னுடன் பணியாற்றிய பெண்ணையும் தன்னையும் அவமானப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்..
Suicidal Trigger Warning
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்