மேலும் அறிய

Crime : குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்..! கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, மருமகன்..! காவல் காத்த மகள்..!

குடித்துவிட்டு தினமும் தகராறு செய்த கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி, மகள் மற்றும் மருமகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, மதுரவாயல் அடுத்து அமைந்துள்ளது ஆலப்பாக்கம். இங்குள்ள கோவிந்தப்பன் நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். அவருக்கு வயது 59. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், திடீரென அவர் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி வசந்தா மதுரவாயல் போலீசாருக்கு உடனே தகவல் அளித்தார். வசந்தா அளித்த தகவலின் அடிப்படையில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராஜேந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் ராஜேந்திரனின் கழுத்தை யாரோ கயிற்றால் இறுக்கியதாக தெரியவந்துள்ளது.

Crime : குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்..! கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, மருமகன்..! காவல் காத்த மகள்..!

இதனால், போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் ராஜேந்திரன் குடும்பத்தினரை அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அவரது குடும்பத்தினர் முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளனர். இதனால், தீவிர சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அவர்களின் விசாரணையின் அடிப்படையில் போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. உயிரிழந்த ராஜேந்திரனுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மேலும், குடித்துவிட்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ராஜேந்திரன் நடவடிக்கையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவரது குடும்பத்தினர் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். ராஜேந்திரனின் மனைவி வசந்தா, அவரது மகள் ராஜேஸ்வரி மற்றும் மருமகன் பிரதாப் ஆகிய மூன்று பேரும் சம்பவத்தன்று வீட்டில் இருந்துள்ளனர்.

Crime : குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்..! கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, மருமகன்..! காவல் காத்த மகள்..!

வழக்கம்போல குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ராஜேந்திரன், மதுபோதையில் தகராறு செய்துள்ளார். ஏற்கனே ராஜேந்திரனை கொலை செய்ய தயாராக இருந்த வசந்தாவும், பிரதாப்பும் தாங்கள் தயாராக வைத்திருந்த கயிற்றால் ராஜேந்திரனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர், ராஜேந்திரனின் உடலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டது போல தொங்கவிட்டுள்ளனர்.

ராஜேந்திரனை மனைவி வசந்தாவும், மருமகள் பிரதாப்பும் கொலை செய்தபோது அவரது மகள் ராஜேஸ்வரி யாரும் உள்ளே வராதபடி காவல் காத்து நின்றுள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை, மனைவியும், மருமகனும் கொலை செய்ய மகள் காவல் காத்து நின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Embed widget