மேலும் அறிய

Chennai: தேர்வு அறையில் பள்ளி மாணவி மாயம்.. தேடிய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி - சிக்கிய இளைஞர்!

அதன்பிறகு, திருச்சி, மதுரை, தேனி என பல ஊர்களுக்கு அழைத்து சென்ற தன்னை, திருச்சி அருகே ஒரு கிராமத்தில்  உள்ள வீட்டில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார்.

11ஆம் வகுப்பு தேர்வு எழுத சென்ற மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

11ஆம் வகுப்பு மாணவி..

சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி பெற்றோரை இழந்ததால், தனது பெரியம்மா வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். அங்கு தனக்கு இருக்கப் பிடிக்கவில்லை என்பதால், போலீசார் உதவியுடன் ஒரு காப்பகத்தில் சேர்ந்து, அங்கிருந்து தனது பள்ளிப் படிப்பை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவி தேர்வு அறையில் இருந்து மாயமானார். இது மாணவி கூட பாதுகாப்புக்கு சென்ற பெண் பாதுகாவலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது மாணவி தேர்வு எழுத வரவில்லை என்று அதிர்ச்சி தகவலை கூறினார்.

இதனைத்தொடர்ந்து, பாதுகாவலர் செங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகாரை மாற்றினர். இதுதொடர்பாக மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த மாணவியின் பெரியம்மாவிடமும் விசாரணை செய்ததில், அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞரை காதலித்ததாகவும், அவர் கடத்தி சென்றிருக்கலாம் என்றும் கூறினார். பெரியம்மா கொடுத்த தகவலின்படி, வழக்குப்பதிவு செய்து மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில், அந்த இளைஞர் மாணவியை செங்குன்றம் பஸ் ஸ்டாண்டில் விட்டுசென்றுள்ளார். இதனால், செய்வதறியாது திகைத்து நின்ற மாணவி, அதே மகளிர் காவல் நிலையத்துக்கு வந்தார்.

அதிர்ச்சி தகவல்..

அப்போது, மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில்,  தான் பெரியம்மா வீட்டில் வளர்ந்து வந்தபோது, துரைமுருகன் என்பவர் தன்னை காதலித்து வந்ததாகவும், இதனை கண்டித்த பெரியம்மா தன்னை காப்பகத்தில் சேர்த்ததாகவும் கூறினார். அதன்பிறகும் தங்களின் காதல் தொடர்ந்த நிலையில், பொதுதேர்வு எழுத வந்தபோது, துரைமுருகன் ரகசியமாக சந்தித்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, போரூரில் சாலையோரத்தில் உள்ள ஒரு கோயிலில் தாலி கட்டினார். அதன்பிறகு, திருச்சி, மதுரை, தேனி என பல ஊர்களுக்கு அழைத்து சென்ற தன்னை, திருச்சி அருகே ஒரு கிராமத்தில்  உள்ள வீட்டில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். மேலும், போலீஸ் அவரை தேடுவது தெரிந்ததும், தன்னை பஸ் ஸ்டாண்டில் விட்டு சென்றதாகவும் கூறினார்.  இதனைத்தொடர்ந்து, செங்குன்றம் அருகே பதுங்கி இருந்த துரைமுருகனை போக்சோ சட்டத்தில் கைது சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget