Instagram ID - யில் வந்த லிங்க்... பெண்ணிடமே மற்றொரு பெண் செய்த வேலை - அதிர்ச்சி தகவல்
பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4,62,130 ஆன்லைன் மூலம் பெற்று மோசடி செய்த பெங்களூருவைச் சேர்ந்த பெண் கைது.

Part Time Job லிங்க் ;
சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் , மண்ணடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த லட்சுமி ( வயது 26 ) என்பவர் அளித்த புகாரில் , Instagram ID க்கு Part Time Job சம்மந்தமாக Link இணைந்த குறுஞ் செய்தி வந்ததாகவும், அந்த Link ஐ கிளிக் செய்தவுடன் ஒரு Telegram Group ல் இணைந்ததாகவும் பின்னர் அதில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் அதில் கொடுக்கப்படும் Task களை முடித்து லாபம் பெறலாம் என்று கூறியதை நம்பி அதில் கொடுக்கப்பட்ட Task களை முடித்து சிறிது லாபம் பெற்றதாகவும் அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட Task களை முடிக்க வேண்டி அடையாளம் தெரியாத நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூபாய். 4,62,130 அனுப்பியதாகவும் பின்னர் அதன் மூலம் எவ்வித பணமும் கிடைக்கப் பெறாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அடையாளம் தெரியாத நபர் மீது நடவடிக்கை மேற்கொண்டு இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு அளித்த புகார் அடிப்படையில் , கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்த குற்றவாளி
விசாரணையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பயன்படுத்திய வங்கிக் கணக்கு விபரங்கள், Phone Number, Mail ID ஆகியவற்றின் IP விபரங்கள் மற்றும் அதன் Network User Id முகவரி ஆகியவற்றை பெறப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கர்நாடகா மாநிலத்தில் இருப்பது பற்றிய விபரம் தெரிய வந்தது.
குற்றவாளியை பிடிக்க கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கின் குற்றவாளியான லில்லி புஷ்பா, ( வயது 27 ) என்பவரை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் மற்றும் 2 ATM கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் லில்லி புஷ்பா பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவது தெரிய வந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட லில்லி புஷ்பா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.





















