மேலும் அறிய
Advertisement
Crime: அண்ணன் இல்லனா தம்பியை தூக்குடா.. கத்தி முனையில் சென்னையில் சம்பவம் செய்த கும்பல்
"மதுரையில் அண்ணன் பணம் மோசடி செய்ததால் தம்பியை கத்தி முனையில் காரில் கடத்தி சென்ற கும்பலால் பரபரப்பு"
மதுரையில் உள்ள அண்ணன் பணம் திருப்பி தராததால், சென்னையில் தங்கி வசித்து வந்த தம்பியை ஒரு கும்பல் கடத்தி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராப் பாடகர்
சென்னை (Chennai News): மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் தேவ் ஆனந்த் (29), நண்பர்களுடன் சேர்ந்து இசை கச்சேரி குழு (ராப் சிங்கர்) நடத்தி வருகிறார். நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், நண்பர்களுடன் இசை கச்சேரி முடித்துவிட்டு காரில் சென்று கொண்டிருந்தார். உடன் வந்த நண்பர்களில் இருவர் திருவேற்காட்டில், இருப்பதால் அவர்களை திருவேற்காட்டில் இறக்கிவிட்டு கல்பாக்கம் செல்வதற்காக தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை, திருவேற்காடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் காரின் மீது இடித்ததால் காருக்கு, ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்று இறங்கி பார்த்தபோது, எதிரே வந்த காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் கையில் கத்தியுடன் வந்து தேவ் ஆனந்தை மடக்கி பிடித்துள்ளார்.
100க்கு கால் செய்து புகார் தெரிவித்த நண்பர்கள்
இவரது அண்ணன் பணம் தர வேண்டும், அதனால் இவரை கடத்தி செல்வதாக கூறிவிட்டு, மின்னல் வேகத்தில் தேவ் ஆனந்தை கத்தி முனையில் காரில் கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். திருவேற்காடு போலீசார் நடத்திய விசாரணையில் தேவ் ஆனந்தின் அண்ணன் சிரஞ்சீவி மதுரையில் சீட்டு நடத்தி பல பேருக்கு பணம் கொடுக்காமல், ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக தெரியவந்தது.
அண்ணனுக்காக கடத்தப்பட்டாரா தம்பி ?
இந்த நிலையில், பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட நபர்களில் சிலர் சிரஞ்சீவியை தேடி வந்த நிலையில் அவர் சிக்காததால், அவரது தம்பி தேவ் ஆனந்த் சென்னைக்கு வருவது அறிந்து கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் கடத்தல் காரர்கள் தேவ் ஆனந்தின் அண்ணன் கொடுக்க வேண்டிய பணத்திற்காக கடத்தி சென்று வந்துள்ளதாக, கூறி விட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டனர். இதனால் திருவேற்காடு போலீசார் தனிப்படைகள் அமைத்து தேவ் ஆனந்தை கடத்தி சென்ற மர்ம கும்பல் எங்கு உள்ளது, என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion