மேலும் அறிய
Advertisement
Crime: அக்கா, தந்தையை கொன்ற இளைஞர்.. மாத்திரை வாங்க சென்றதால் உயிர் தப்பிய தாய்
"மாத்திரை வாங்க சென்றதால் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பிய தாய்"
சென்னை அடுத்த மாங்காடு, அடிசன் நகர், ராகவேந்திரா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த செல்வராஜ் (65), இசை பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சாந்தி (55), சினிமா துறையில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவர்களுக்கு ராஜேஷ் பிராங்கோ (40), பிரியா (38), பிரகாஷ் (32), என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ராஜேசுக்கு திருமணமாகி படப்பையில் வசித்து வரும் நிலையில், பெட் ரீஷா பவா பிரியா (38), திருமணமாகி அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடைசி மகன் பிரகாஷ் மட்டும் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் சினிமா துறையில் டப்பிங் ஆர்டிஸ்டாக பனி புரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
மறைத்து வைத்திருந்த கத்தியால்
இந்த நிலையில் நேற்று மாலை பிரியாவின் வீட்டிற்கு சென்ற பிரகாஷ் அங்கு தனது அக்காவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பிரகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரியாவின் கழுத்தில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் ரத்த வெள்ளத்தில் பிரியா மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதனை கண்டதும் அவரது வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து சத்தம் போட்டதையடுத்து பிரகாஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
பிரகாசை கைது செய்து விசாரணை
இதையடுத்து அவரது தாய் மற்றும் அண்ணனுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தனது தந்தையை காணவில்லை என வீட்டிற்கு சென்று பார்த்தபோது, செல்வராஜ் படுக்கையறையில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மாங்காடு போலீசார் அங்கேயும் சென்று கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த தந்தை செல்வராஜ் மற்றும் அக்கா பிரியா ஆகிய இருவரின் உடல்களை மீட்டு பிரதே பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பிரகாசை தீவிரமாக தேடி வந்த நிலையில் அதே பகுதியில் சுற்றி திரிந்த அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிரகாஷ் சினிமா துறையில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்ததாகவும் நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு ஆளான அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்ததாகவும், தனியார் மருத்துவமனையில் பணம் கட்டி பார்க்க முடியாததால் , கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அவரது பெற்றோர், அக்கா அனைவரும் கூடி பேசி இருந்ததாகவும், இன்றைய தினம் பிரகாசிற்கு மாத்திரைகள் வாங்குவதற்காக அவரது தாய் மருத்துவமனைக்கு சென்று இருந்த நிலையில், ஆத்திரமடைந்து தந்தை மற்றும் அக்காவை கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் அடிக்கடி வீட்டில் பெற்றோர், அக்காவிடம் சண்டை போட்டு வந்த நிலையில் நேற்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த தந்தையை முதலில் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அதன் பிறகு அக்கா இருக்கும் வீட்டிற்கு சென்று அவரது கழுத்தையும் அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? சொத்து பிரச்சனை ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் மாங்காடு போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து அக்கா மற்றும் தந்தையின் கழுத்தை மகனே அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion