மேலும் அறிய
Advertisement
Crime: பதறிய சென்னை புறநகர்...தங்கை கொலைக்கு பழி தீர்த்த அண்ணன்
புதுப்பாக்கம் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த தங்கையை தீயிட்டு கொளுத்தி கொன்ற குற்றவாளி ஜெயிலில் இருப்பதால், பழிக்கு பழி வாங்க 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுகன்யா (வயது 38). இவரது கணவர் வெளியூரில் தங்கி பணிபுரிவதால், சுகன்யா புதுப்பாக்கத்தில் இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
திருமணத்தை மீறிய உறவு
சுகன்யா புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே வாடகை கட்டிடத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். சுகன்யா கடைக்கு அருகில் மோட்டார் வைண்டிங் மின் சாதனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தவர் பாலாஜி (26). இவருக்கும், சுகன்யாவுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் சுகன்யாவின் கணவர் வெங்கடேசனுக்கு தெரிய வந்து இருவரையும் கண்டித்துள்ளார். மேலும், பாலாஜியின் தந்தை குமாரும் இருவரையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் இரு தரப்பினரின் கண்டிப்பிற்கும் பிறகும், இருவரும் தொடர்பை கைவிடாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7- ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில், சுகன்யாவின் கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து பலத்த தீக்காயங்களுடன் சுகன்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தீ விபத்து குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தபோது, விசாரணையில் பாலாஜியின் தந்தை குமார் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது.
பழிவாங்க துடித்த சகோதரன்
இந்த கொலை வழக்கு சம்பந்தமாக அன்றைய தினம் கேளம்பாக்கம் போலீசாரின் விசாரணையில் , சுகன்யாவுடன் பாலாஜியின் தந்தை குமார் ஒருதலைபட்சமாக தொடர்பில் ஈடுபட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு சுகன்யா சம்மதம் தெரிவிக்காமல் பெட்ரோல் ஊற்றி கொலை செய்தது வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் குமார் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். தற்பொழுது வரை சிறையில் இருக்கும் குமாரை பழி வாங்க முடியாத சூழலில், தங்கை இழப்புக்கு காரணமாக இருந்த குமாரின் மகன் பாலாஜியை, சுகன்யாவின் அண்ணன் ரவி மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் சேர்ந்து புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள, பாலாஜியின் ஒர்க் ஷாப் கடை அருகில் வெட்டி படுகொலை செய்துள்ளனார்.
திட்டம் தீட்டி கொடூரக் கொலை
இதில் பாலாஜிக்கு தலை, கை, கால், முகம் சிதைக்கப்பட்டு. சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு காரில் வண்டலூர் வழியாக தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோஸ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று, பாலாஜியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் வந்து அப்பகுதியில் சோதனை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.
மடக்கி பிடித்த காவல்துறை
இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து மைக் மூலமாக காரில் தப்பிச் சென்ற நபர்களை பிடிக்க செங்கல்பட்டு சென்னை உள்ளிட்ட சுற்று வட்டார இடங்களில் உள்ள காவல் நிலையத்திற்கு, தகவல் அளிக்கப்பட்டு அந்தந்த டோல்கேட்டுகளில் போலீசார் சோதனை கொண்டு வந்தனர். இதில் கொலை செய்தவர்கள் வண்டலூர் சாலை வழியாக சென்று அங்கிருந்து பாண்டிச்சேரி நோக்கி மதுராந்தகம் வழியாக செல்லும் போது தொழுப்பேடு பகுதியில் அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுகன்யாவின் சகோதரர் ரவி (வயது 42) அவரது கூட்டாளிகள் சரவணன் (வயது 22), ஆனந்த் (வயது 24) அரவிந்த் (வயது 24), திருமாவளவன் (வயது 25), மற்றும் ஸ்டீபன் ராஜ் (வயது 22) ஆகிய ஆறு பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய வீச்சருவாள் காரை பறிமுதல் செய்தனர். தன் தங்கையை கொலை செய்ததால் பழிக்கு பழி வாங்க நடைபெற்ற கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திருச்சி
தேர்தல் 2024
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion