மேலும் அறிய

முடியவே முடியாது... மனமுறிவு கேட்ட காதல் கணவர்... மனமுடைந்து பெண் டாக்டர் செய்த செயல்...!

சென்னை கே.கே.நகரில் காதல் கணவன் விவாகரத்து கோரியதால் அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர் ஒருவர். தனது உடலில் விஷ ஊசி செலுத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகர் அருணாச்சலம் தெருவை சேர்ந்தவர் 28 வயதான லோகித்சாய். இவர் கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது, உடன் படித்த 27 வயதான ராயலட்சுமி என்பவரை காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது ராயலட்சுமி, கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த டாக்டர் ராயலட்சுமி மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. மேலும், இதற்காக சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் ஆலோசனைப்படி மருந்து எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையல், லோகித் சாய் தனது மனைவி ராயலட்சுமியிடம் விவாகரத்து கேட்டுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் மாலை வக்கீல் ஒருவரை பார்த்துவிட்டு வரலாம் என்று மனைவியை அழைத்துள்ளார். இது ராயலட்சுமிக்கு பிடிக்கவில்லை. தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்பியுள்ளார். ஆனாலும், லோகித் சாய், வழக்கறிஞரிடம் செல்வதில் உறுதியாக இருந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ராயலட்சுமி, வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று, கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த லோகித் சாய் பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. உடனே லோகித் சாய் குடியிருப்பில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, படுக்கையில் ராயலட்சுமி மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது அருகே இதய அடைப்பை ஏற்படுத்தும் மருந்து மற்றும் ஊசி கிடந்தது.

அவரது கையில் ஊசி குத்தியதற்கான தழும்பும் இருந்துள்ளது. அதைபார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் உடனே மனைவியை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த கே.கே.நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பெண் டாக்டர் தற்கொலை முயற்சி செய்த மருந்து மற்றும் ஊசியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget