மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
விலை உயர்ந்த செருப்புகளை திருடி பிராட்வேயில் குறைந்த விலைக்கு விற்ற பலே திருடன் கைது
ராஜாவிற்கு எப்பொழுதெல்லாம் வேலை இல்லையோ அப்போதெல்லாம் பல்வேறு இடங்களில் சென்று விலை உயர்ந்த செருப்புகளை திருடி அதனை பாரிமுனையில் குறைந்த விலைக்கு விற்று வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது
சென்னை பெரவள்ளூர் பெரியார் நகர் தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் சந்திரபாபு (61) இவர் நேற்று காலை 10 மணி அளவில் இவர் தனது வீட்டில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை பார்த்த போது அதில் அடையாளம் தெரியாத நபர் இவரது அடுக்குமாடி காம்பவுண்டுக்குள் உள்ளே நுழைந்து வீட்டின் வெளியே இருக்கும் காலணிகளை திருடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த பெரவள்ளூர் போலீசார் அந்த மர்ம நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் கோயம்புத்தூர் உக்கடம் பகுதியை சேர்ந்த ராஜா (35) இவர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கூலி வேலை செய்து வந்ததும் எப்பொழுதெல்லாம் வேலை இல்லையோ அப்போதெல்லாம் பல்வேறு இடங்களில் சென்று விலை உயர்ந்த செருப்புகளை திருடி அதனை பாரிமுனையில் குறைந்த விலைக்கு விற்று வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன சோதனையின் போது போலீசை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற நபர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல்.. கஞ்சா வியாபாரி உட்பட 5 பேர் கைது..
சென்னை கொடுங்கையூர் மூலக்கடை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது அதன் பேரில் கொடுங்கையூர் மூலக்கடை சந்திப்பு அருகே சப் - இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் போலீஸாரைக் கண்டதும் ஓட முயற்சி செய்தனர். அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர்கள் , கொடுங்கையூர் அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி மணிகண்டன் (எ) கஞ்சா மணி 21 அதே பகுதியை சேர்ந்த கணேசன் (19 ) மற்றும் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (எ) வண்டு 19 என்பது தெரிய வந்தது. இவர்களிடத்தில் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் ஏற்கனவே காசிமேடு , கொடுங்கையூர் , மன்னடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (எ) ஆடு மணி (20) கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த வினோத் (19 ) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவரிடமிரந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது கைது செய்யப்பட்டவர்களில் கணேசன் மோகன்ராஜ் ஆகிய இருவர் மீதும் கூடுவாஞ்சேரி , மறைமலை நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion