மேலும் அறிய

Crime: தன்பாலின உறவு விவகாரம்; கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை - சென்னை அருகே சோகம்

மறைமலைநகர் அருகே தன்பாலின உறவு விவகாரத்தால் கடிதம் எழுதிவைத்துவிட்டு வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கீழ்க்காரணை பகுதியை சேர்ந்தவர் கபாலி. இவரது மகன் கார்த்திக் (21) தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரோடு கர்நாடகா மாநிலம் சிக்மங்களூர் பகுதியை சேர்ந்த பொன்னப்பன் என்பவரது மகன் லோகேஷ் (22) என்பவரும் பணியாற்றி வருகிறார். லோகேஷ் தனது நண்பர்களுடன் கார்த்திக்கின் சித்தி வீட்டு மாடியில் வாடகைக்கு தங்கி வேலை பார்த்து வருகிறார். கார்த்திக் தினசரி லோகேஷ் ரூமிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். லோகேஷும் கார்த்திக்கும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

Crime: தன்பாலின உறவு விவகாரம்; கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை - சென்னை அருகே சோகம்

ஒருவர் பிரிய முடியாமல் பழகி

இதுவே நாளடைவில் தன்பாலின உறவு வரை சென்றது. இதில் ஒருவரை ஒருவர் பிரிய முடியாமல் பழகி வந்தனர். இதற்கிடையில் லோகேஷ் உடன் தங்கியிருந்த நபர்கள் இந்த ரூமை விட்டு வேறு இடம் சென்று விட்டனர். அதன் பிறகு கார்த்திக் அவரது அப்பா அம்மாவோடு  வீட்டில் தங்காமல் கடந்த மூன்று மாதமாக லோகேஷ் ரூமிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். கார்த்திக்கின் பெற்றோர் வீட்டுக்கு வரச்சொல்லி வலியுறுத்தியும் வீட்டுக்கு வராமல் லோகேஷோடு அங்கேயே தங்கி ஒன்றாகவே வேலைக்கு செல்வது ஒன்றாக வருவது என வாழ்ந்துள்ளனர். 

ஒரு கட்டத்தில் லோகேஷ் கார்த்திக்கிடம் இருந்து விலக முடிவு செய்து சொந்த ஊரான சிக்மங்களூர் சென்றுவிட்டார். கார்த்திக் லோகேஷை மறக்க முடியாமல் சிக்மங்களூருக்கே தேடி சென்று லோகேஷை மீண்டும் அழைத்து வந்துவிட்டார். இதுகுறித்து கார்த்திக் வீட்டுக்கு தெரிந்து கார்த்திக் லோகேஷை பிரிக்க திட்டமிட்டு சில தினங்களுக்கு முன்பு கார்த்திக்கை கண்டித்துள்ளனர்.

வேலைக்கு செல்லாமல்

அதனால் மன உளச்சலோடு இருந்து வந்த கார்த்திக் நேற்று காலை வேலைக்கு செல்லாமல் வீட்டில் தங்கிவிட்டார். லோகேஷ் மட்டும் வேலைக்கு சென்றுவிட்டு திரும்ப வந்து பார்த்த போது வீட்டில் கார்த்திக் இல்லை.

அவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றித்திரிந்து வந்த இடங்களில் எல்லாம் லோகேஷ் கார்த்திக்கை தேடிவந்துள்ளார். கார்த்திக் கிடைக்காததால் லோகேஷ் நண்பனை காணவில்லை என மறைமலைநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .

மீண்டும் தொடர்ந்து கார்த்திக்கை தேடிய போது சிங்கபெருமாள் கோயில் அருகே உள்ள கிணற்றின் அருகே கார்த்திக் செருப்பு இருப்பதை கண்டவுடன், இந்த கிணற்றில்தான் கார்த்திக் உடல் இருக்கிறது என் நண்பனை மீட்டு தாருங்கள் என தீயணைப்பு துறையினரிடம் உதவி கேட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து மறைமலைநகர் காவல் நிலையத்திலும், கார்த்திக்கின் சடலம் கிடப்பதாக லோகேஷ் கூறியதன் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் கார்த்திக்கின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர். லோகேஷ் ரூமை சோதனையிட்டபோது ஒருகடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதம் கார்த்திக் கைப்பட எழுதியதா?, கார்த்திக் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் லோகேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Suicidal Trigger Warning

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget