மேலும் அறிய
சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்ட சில நிமிடங்களிலே உயிரிழந்த சிறுவன் ..! பின்னணி என்ன ?
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவனின் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது
![சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்ட சில நிமிடங்களிலே உயிரிழந்த சிறுவன் ..! பின்னணி என்ன ? chengalpattu oy died within a few minutes of being admitted to the reform school சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்ட சில நிமிடங்களிலே உயிரிழந்த சிறுவன் ..! பின்னணி என்ன ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/ad52eddce912924f3f3c9dec26a883451672518035076109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிறுவர் சீர்திருத்தப்பள்ளி
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கன்னம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ஹரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 17. அந்தப் பகுதியில் அடிக்கடி திருட்டு செயலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹரி மீது இரண்டு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் சென்று வந்துள்ளார் . இந்த நிலையில் ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக , தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு போலீசார் சிறுவனை, நேற்று முன் தினம் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
![சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்ட சில நிமிடங்களிலே உயிரிழந்த சிறுவன் ..! பின்னணி என்ன ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/5dbf854d05da1d240d960361a57a655b1672518003550109_original.jpg)
தொடர்ந்து, நேற்று நீதிமன்ற உத்தரவின்படி செங்கல்பட்டு சீரா சீர்திருத்த பள்ளியில் ஹரியை நீதிமன்ற உத்தரவின் படி, அடைத்து விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஹரிக்கு எதிர்பாராத விதமாக வலிப்பு வந்து மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அதற்குள்ளாகவே ஹரி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஹரி உடல் தற்பொழுது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று நீதிபதி உயிரிழந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion