மேலும் அறிய

கமிஷனுக்கு ஆசைப்பட்ட போலீஸ்... போர்ஜரி வேலையில் ஈடுபட்டதால் எஸ்.பி எடுத்த அதிரடி..

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுவிலக்கு ஆய்வாளரின் கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்திய காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் .

செங்கல்பட்டு மாவட்டம் மதுவிலக்கு காவல் ஆய்வாளரின் கையெழுத்தை மோசடியாக, பயன்படுத்திய காவலர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளனர்

மதுராந்தகம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர்

செங்கல்பட்டு மாவட்டம்  அச்சரப்பாக்கத்தில், மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலையம் இயங்கி வருகிறது. மதுவிலக்கு ஆய்வாளராக  மங்கள பிரியா  என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடப்பாக்கம் அருகே உள்ள சேம்புலிபுரம் பகுதியில், குருசாமி என்பவரை மது பாட்டில்கள் விற்றதாக,  மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து அவருடைய வங்கி கணக்கை முடக்கியுள்ளனர்.

வங்கி கணக்கு முடக்கம்

கைது செய்யப்பட்ட குருசாமி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் , அவரது  வங்கிக் கணக்கில் சுமார் 6.30 லட்சம் மது விற்ற பணம் இருந்துள்ளது. மதுவிலக்கு ஆய்வாளரிடம்  குருசாமி தன்னுடைய வங்கி கணக்கை எப்படி விடுவிப்பது என விசாரித்துள்ளார். அப்போது  ஆய்வாளர் முறையாக நீதிமன்றத்தை அணுக வேண்டுமென ஆலோசனை கூறியுள்ளார்.

ஆனால், சாராய வியாபாரி குருசாமி மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி மாறுதலாக, கூவத்தூர் காவல் நிலையத்திற்கு சென்ற தலைமை காவலர்கள் கோபிநாத் மற்றும் மணிகண்டன் ஆகியோரிடம் குறுக்கு வழியில் பணத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்காக ஆலோசனை கேட்டுள்ளார் .

1.5 லட்சம் கமிஷன்

இந்த ஆலோசனையில் அடிப்படையில் சாராய வியாபாரி குருசாமி  காவலர் கோபிநாத்திடம்  என்னுடைய வங்கி கணக்கை மீண்டும் இயக்குவதற்கு நீங்கள் உதவி செய்தால் , அதில் உள்ள பணம் ரூபாய் ஒன்றரை லட்சம் உங்களுக்கு கமிஷன் தருகிறேன் என கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட தலைமை காவலர் கோபிநாத், மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் மணிகண்டன் மூலம் தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார்.‌

திருட்டு வேலையில் ஈடுபட்ட காவலர்கள்

இதற்கு ஒப்புக்கொண்ட மணிகண்டன், மதுவிலக்கு ஆய்வாளர் அலுவலக முத்திரையை ஆய்வாளரின் அனுமதியின்றி பயன்படுத்தியும், போலியாக ஒரு பத்திரம் எழுதி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மங்களபிரியா கையெழுத்தை போலியாக போட்டு சாராய வியாபாரி குருசாமியிடம் கொடுத்துள்ளனர். இந்த கடிதத்தைப் பெற்றுக் கொண்ட சாராய வியாபாரி குருசாமி கடப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கியின்  மேலாளரிடம் வழங்கியுள்ளார் . இதனை ஆய்வு செய்த வங்கியின் மேலாளர் காவல் ஆய்வாளரிடம் தொடர்பு கொண்ட போது, ஆய்வாளர் நான் எந்த ஒரு கடிதமும் கொடுத்து அனுப்பவில்லை என கூறியுள்ளார். இதன் அடிப்படையில் விசாரித்த காவல் ஆய்வாளர் முழு விசாரணை நடத்தியபோது , கோபிநாத் மற்றும் மணிகண்டன் இவர்கள் இருவரும் இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சஸ்பெண்ட் செய்து உத்தரவு

காவலர் கோபிநாத் மற்றும் மணிகண்டனை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வாளரின் அலுவலக முத்திரையை தவறாக, பயன்படுத்த முயன்ற தலைமைக் காவலர்கள் கோபிநாத் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார். காவல்துறைக்கு என மக்கள் மத்தியில், கௌரவமான பெயர் இருக்கும்போது, ஒரு சில காவலர்கள் செய்யும் செயலால், நாட்டுமட்ட காவல்துறைக்கும் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்வது போல திருடனுக்கு துணைபோன காவலர்களால், இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Silver Price: ஜெட் வேகத்தில் உயர்வு! தங்கம் விலை ரூ.56 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்!
Gold Silver Price: ஜெட் வேகத்தில் உயர்வு! தங்கம் விலை ரூ.56 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்!
Breaking News LIVE, Sep 24:  திரௌபதி பட இயக்குநர் மோகன்ஜி போலீசாரால் கைது? 
Breaking News LIVE, Sep 24: திரௌபதி பட இயக்குநர் மோகன்ஜி போலீசாரால் கைது? 
Israel Attacks Lebanon: கொத்து கொத்தாக பிணங்கள்..! 492 பேர் உயிரிழப்பு, 1600 பேர் காயம் - இஸ்ரேல் தாக்குதலால் கலங்கிய லெபனான்
Israel Attacks Lebanon: கொத்து கொத்தாக பிணங்கள்..! 492 பேர் உயிரிழப்பு, 1600 பேர் காயம் - இஸ்ரேல் தாக்குதலால் கலங்கிய லெபனான்
Encounter Death: இந்தியா முழுவதும் 7 ஆண்டுகளில் இத்தனை என்கவுன்டர்களா? மாநில வாரியாக லிஸ்ட் இதோ!
Encounter Death: இந்தியா முழுவதும் 7 ஆண்டுகளில் இத்தனை என்கவுன்டர்களா? மாநில வாரியாக லிஸ்ட் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tobacco in Tirupati Laddu | ”திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட், சிக்ரெட்” மீண்டும் வெடித்த சர்ச்சைTirupati Devasthanams | புனிதத்தை மீட்க  திருப்பதி தேவஸ்தானம் செய்த செயல்Rahul Gandhi : ”நான் தப்பா பேசுனேனா..என்னை தடுக்க முடியாது” ராகுல் ஆவேசம்Aadhav Arjuna on deputy cm : ”உதய் துணை முதல்வரா? திருமா-வ போடுங்க” கொளுத்திப்போட்ட ஆதவ் அர்ஜூனா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Price: ஜெட் வேகத்தில் உயர்வு! தங்கம் விலை ரூ.56 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்!
Gold Silver Price: ஜெட் வேகத்தில் உயர்வு! தங்கம் விலை ரூ.56 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்!
Breaking News LIVE, Sep 24:  திரௌபதி பட இயக்குநர் மோகன்ஜி போலீசாரால் கைது? 
Breaking News LIVE, Sep 24: திரௌபதி பட இயக்குநர் மோகன்ஜி போலீசாரால் கைது? 
Israel Attacks Lebanon: கொத்து கொத்தாக பிணங்கள்..! 492 பேர் உயிரிழப்பு, 1600 பேர் காயம் - இஸ்ரேல் தாக்குதலால் கலங்கிய லெபனான்
Israel Attacks Lebanon: கொத்து கொத்தாக பிணங்கள்..! 492 பேர் உயிரிழப்பு, 1600 பேர் காயம் - இஸ்ரேல் தாக்குதலால் கலங்கிய லெபனான்
Encounter Death: இந்தியா முழுவதும் 7 ஆண்டுகளில் இத்தனை என்கவுன்டர்களா? மாநில வாரியாக லிஸ்ட் இதோ!
Encounter Death: இந்தியா முழுவதும் 7 ஆண்டுகளில் இத்தனை என்கவுன்டர்களா? மாநில வாரியாக லிஸ்ட் இதோ!
Skoda Kylaq vs Kushaq: ஸ்கோடா கைலாக் Vs  குஷாக் - என்ன வித்தியாசம்? எந்த கார் சிறந்தது? ஒப்பீடு இதோ..!
Skoda Kylaq vs Kushaq: ஸ்கோடா கைலாக் Vs குஷாக் - என்ன வித்தியாசம்? எந்த கார் சிறந்தது? ஒப்பீடு இதோ..!
மாமல்லபுரம் கடலில் தோன்றிய பல்லவர் கால அதிசயம்... வெளிப்பட்ட மகிஷாசூரமர்த்தினி குடைவரை கோயில்...
மாமல்லபுரம் கடலில் தோன்றிய பல்லவர் கால அதிசயம்... வெளிப்பட்ட மகிஷாசூரமர்த்தினி குடைவரை கோயில்...
Oscar: தெய்வமகன் முதல் கூழாங்கல் வரை! தமிழில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படங்கள் இத்தனையா?
Oscar: தெய்வமகன் முதல் கூழாங்கல் வரை! தமிழில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படங்கள் இத்தனையா?
மீனவர்களுக்கு அபதாரம் விதிப்பது  குறித்து  குளிர்கால கூட்டத் தொடரில் குரல் கொடுப்போம் - மாணிக்கம் தாகூர்
மீனவர்களுக்கு அபதாரம் விதிப்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் குரல் கொடுப்போம் - மாணிக்கம் தாகூர்
Embed widget