மேலும் அறிய

மயிலாடுதுறை: அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்த பாஜகவினர் மீது வழக்கு பதிவு

திமுக அரசுக்கு எதிராக மயிலாடுதுறையில் அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சி குறித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுருந்தார். அந்த செய்தி குறிப்பில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “மத்திய அரசு ஆண்டுதோறும் பட்டியல் பிரிவு மக்கள் முன்னேற்றத்திற்காக, மாநிலங்களுக்குப் பெருமளவில், நிதி ஒதுக்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் நிதி, பட்டியல் பிரிவு மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்திட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.

மயிலாடுதுறை: அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்த பாஜகவினர் மீது வழக்கு பதிவு

இந்த நிலையில், SCSP திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, முந்தைய ஆட்சிக் காலத்தில் (2016-2021) சுமார் 2900 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்திருக்கிறது. திமுக ஆட்சியில் 2021-2022 ஒரு ஆண்டிலேயே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 2418 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை என்று வெளிவந்திருக்கும் செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மேலும், 2022 -23 நிதி ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான தகவலின்படி மத்திய அரசு தமிழ்நாடின் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கிய 16.442 கோடி ரூபாய் நிதியில், தமிழ்நாடு அரசு 10,466 கோடி ரூபாய் செலவிடாமல் உள்ளது என்ற செய்தியை கேட்டு மீண்டும் ஒருமுறை அதிர்ச்சிக்குள்ளானேன்.

மயிலாடுதுறை: அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்த பாஜகவினர் மீது வழக்கு பதிவு

கல்வி, வீட்டு வசதித் திட்டங்கள், வேலைவாய்ப்பு, நூலகங்கள், மாணவர் விடுதிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்க, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் முழுவதுமாகப் பயன்படுத்தாமல் இருப்பது, திமுக அரசின் மெத்தனத்தையும் சமுதாயத்தில் பின் தங்கியிருக்கும் மக்கள் மீதான கடும் அலட்சிய போக்கையும் காட்டுகிறது. தமிழ்நாடு பட்டியலின மக்கள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் சில, மாநில பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கான ஆணையத்தில் போதுமான அளவு ஊழியர்கள் இல்லாததும், மாநில அரசிடம் இருந்து நிதி சரிவர ஒதுக்கப்படாததும்தான் என செய்திகள் வெளிவந்திருக்கின்றன. பல மாவட்டங்களில் பட்டியல் இன மக்கள் வாழும் கிராமங்களில், கழிப்பறை வசதிகள்கூட அமைத்து தரப்படவில்லை என்ற செய்திகளும் வெளிவந்திருக்கின்றன.

மயிலாடுதுறை: அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்த பாஜகவினர் மீது வழக்கு பதிவு

இவை தவிர, தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள், அடிப்படை வசதிகளே இல்லாத அவல நிலையில் இருக்கின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியல் பிரிவு மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை சரிவர வழங்கப்படாமல் இருக்கிறது. ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லை. செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் எத்தனையோ இருக்க, அவற்றைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லாமல், மத்திய அரசு வழங்கும் நிதியையும் பயன்படுத்தாமல், தொடர்ந்து பட்டியல் பிரிவு மக்களை வஞ்சித்து வருகிறது இந்த திறனற்ற திமுக அரசு. இது மட்டுமல்லாது, பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, மற்ற திட்டங்களுக்குப் பயன்படுத்துவதாகவும் திமுக அரசின் மேல் குற்றச்சாட்டு உள்ளது.

மயிலாடுதுறை: அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்த பாஜகவினர் மீது வழக்கு பதிவு

மேலும் இதுதொடர்பாக, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை பத்திரிகையாளர்கள் தொடர்புகொண்டபோது, இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதாக அலட்சியமாக பதிலளித்திருக்கிறார் அமைச்சர். பொதுமக்கள் மேல், திமுகவின் அக்கறை இந்த அளவில்தான் இருக்கிறது. பெயரளவில் சமூக நீதி என்று மேடை மேடையாக நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்காக, பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்து வரும் நலத்திட்டங்களைச் செயல்படுத்த திறனற்ற திமுக அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியிருந்தார்.

மயிலாடுதுறை: அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்த பாஜகவினர் மீது வழக்கு பதிவு

இந்நிலையில், மயிலாடுதுறை அருகே அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலையிடம் பாரதிய ஜனதா கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் அகோரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக பேரணியாக வந்து அம்பேத்கர் சிலை முன்பு திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை காவல்துறை அனுமதி வழங்காத நிலையில் போராட்டம் நடத்தியதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அரசு அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக பாஜக மாவட்ட தலைவர் அகோரம், நிர்வாகிகள் நாஞ்சில் பாலு, மோடி கண்ணன், பிரபாகரன், வினோத், சித்தர்க்காடு கோவி.சீதாராமன், வெங்கடேசன், பாரதி ஆகிய 8 பேர் மற்றும் பலர் மீது 3 பிரிவுகளின் கீழ் மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget