மேலும் அறிய

2-வது கணவர்அளித்த புகார்... சசிகலா புஷ்பா மீது காவல்துறை வழக்குப்பதிவு

சசிகலா புஷ்பா, தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜா, விழுப்புரத்தைச் சேர்ந்த அமுதா ஆகிய மூவர்மீது கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவரது இரண்டாவது கணவர் ராமசாமி வழக்கறிஞராக இருக்கிறார். இவரும் இவரது மகளும் ஊருக்குச் சென்று சென்னை ஜீவன் பீமா நகரில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பியபோது, ஒரு படுக்கை அறையில் சசிகலா புஷ்பா உறங்கிக்கொண்டும், மற்றொரு அறையில் யாரென்று தெரியாத மற்றொரு நபர் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளார். இதனால் ,கணவன் என்ற முறையில் எனக்கு தெரியாமல் அந்த நபர்களை வீட்டிற்குள் அனுமதித்த மனைவி சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ராமசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இந்நிலையில், ராமசாமி கொடுத்த புகாரின் பேரில், சசிகலா புஷ்பா, தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜா, விழுப்புரத்தைச் சேர்ந்த அமுதா ஆகிய மூவர்மீது கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

2-வது கணவர்அளித்த புகார்... சசிகலா புஷ்பா மீது காவல்துறை வழக்குப்பதிவு

கடந்த மாதம், ஊருக்குச் சென்று வீடு திரும்பிய ராமசாமியும், அவரது மகளும் வீட்டின் கதவை வெகுநேரமாக தட்டியும் திறக்காததால் சசிகலா புஷ்பாவிற்கு போன் அடித்துள்ளார். அந்த நேரத்தில் அமுதா என்ற ஒரு பெண் கசங்கிய ஆடைகளுடன் வந்து கதவை திறந்துள்ளார். யார் என்றே தெரியாத இந்த பெண் நம் வீட்டில் என்ன செய்கிறார் என்று நினைத்து கொண்டே ராமசாமி வீட்டிற்குள் சென்றபோது, வீடு முழுவதும் உண்ட உணவு பொருட்கள் சிதறியும், மதுவின் வாசனையும் அடித்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் ராமசாமி தன் செல்போன் மூலம் அனைத்தையும் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து, அந்த மர்ம நபர் மற்றும் கதவை திறந்த அமுதா என்ற பெண்ணும் சேர்ந்து அவரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். அதனை அடுத்து, மனைவி சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ராமசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

முன்னதாக, அதிமுக மாநிலங்களவை எம்பியாக இருந்த சசிகலா புஷ்பா, டெல்லி விமான நிலையத்தில் திமுக ராஜ்யசபா எம்.பி.திருச்சி சிவாவை கன்னத்தில் ஓங்கி அறைந்த சர்ச்சையில் சிக்கினார். அதன் பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது ஒரு சில குற்றசாட்டுகளை முன்வைத்தார். தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு முயற்சி செய்து, அதன்பிறகு அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 

பாஜகவில் இணைந்த சில நாட்களில் இவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது. மேலும், பாஜக தமிழக தலைவர் பதவிக்கு முயற்சி செய்ததாக தகவலும் பரவியது. முதல் கணவன் லிங்கேஸ்வரனிடம் இருந்து பிரிந்த சசிகலா புஷ்பா, இரண்டாவதாக வழக்கறிஞர் ராமசாமியை டெல்லியில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget