மனைவியை பேய்-காட்டேரி என சொல்வது கொடுமையாகாது - பாட்னா உயர்நீதிமன்றம்
மனைவியை பேய் அல்லது காட்டேரி என்று குறிப்பிடுவது கொடுமையாகாது என பாட்னா உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
பாட்னா உயர் நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில், ம்னைவியை பேய் அல்லது காட்டேரி என்று குறிப்பிடுவது சட்டத்தின் அடிப்படையில் கொடுமையாகாது என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
வழக்கு:
மார்ச் 1, 1993 அன்று, நரேஷ் மற்றும் ஜோதி ஆகிய தம்பதி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். வரதட்சணையாக கார் தராததால், நரேஷ் மற்றும் அவரது தந்தை தனது மகளை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சித்திரவதை செய்ததாக ஜோதியின் தந்தை கன்ஹையா லால் புகார் அளித்தார்.
ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில் வசிக்கும் சஹ்தியோ குப்தா மற்றும் அவரது மகன் நரேஷ் குமார் குப்தா ஆகியோரின் மீதான குற்றவியல் வழக்கில், ஐபிசியின் 498-ஏ பிரிவின் கீழ் கொடுமை அளித்தல் மற்றும் வரதட்சணை கோருதல், சட்டவிரோதமானது என்றும் தண்டனை அளித்தும் நாளந்தா கூடுதல் அமர்வு தீர்ப்பளித்தது.
ரத்து செய்த உயர்நீதிமன்றம்:
இதையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து, கணவரின் தரப்பில் மேலுமுறையீடு செய்யப்பட்டது. இந்த குற்றவியல் வழக்கானது, உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பிபேக் சவுத்ரியின் ஒற்றை பெஞ்ச் விசாரித்தது. மனுதாரரின் மனைவியை சித்திரவதை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் எந்த மருத்துவப் பதிவுகளோ அல்லது பிற ஆதாரங்களோ ஆதாரமற்றவை என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
மேலும் நீதிபதி சவுத்ரி தனது தீர்ப்பில், இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு பெண்ணை "பேய்" மற்றும் "காட்டேரி" என்று அழைப்பது மன வேதனைக்கு சமம் என்ற வழக்கறிஞரின் புகாரின் வாதத்தையும் உயர்நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.
பாட்னா உயர் நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில், தம்பதியின் திருமண வாழ்க்கையில் சண்டையிடும் போது மனைவியை பேய் அல்லது காட்டேரி என்று குறிப்பிடுவது சட்டத்தின் அடிப்படையில் கொடுமையாகாது என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தி, வழக்குக் கோப்புகளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஆயினும்கூட, "பேய்" மற்றும் "காட்டேரி என கூறும் கூற்றுக்கள் அனைத்தும் கொடுமையின் வகைக்குள் வராது என்று பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டு கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், இவ்வழக்கு குறித்தான தீர்ப்பானது, பலராலும் பேசப்பட்டு வருகிறது.
Also Read: பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம்; பெண்ணின் மீது உறவினர்கள் கொலை வெறி தாக்குதல்