மேலும் அறிய
Advertisement
கண்டித்த பெற்றோர்... இளம்பெண் தற்கொலை...உயிரை விட்ட காதலன்..!
காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில் காதலனும் தற்கொலை
கடலூர் மாவட்ட பண்ருட்டி அடுத்த ஒறையூர் கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி (வயது 15), அதே ஊரைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 19) பாலிடெக்னிக் மாணவர் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மாணவி வீட்டுக்கு தெரிய வந்ததால் மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 14.06.22 அன்று மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் காதலன் ஆகாஷ் மனம் உடைந்து காணப்பட்டு வந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் மாணவர் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம் - தங்க பிஸ்கட் கடத்திய நபர்கள் கைது
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தே.பொடையூர் கிராமத்தைச் சேர்ந்த பாலையா கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் எட்டு மாதம் வேலை இல்லாமல் இருந்துள்ளார்.
எப்படியாவது ஊருக்கு செல்ல வேண்டும் என்று இருந்த நிலையில் துபாயில் இருக்கும் ஒருவர் ’நான் உங்களை ஊருக்கு அனுப்பி வைக்கிறேன் நான் கொடுக்கும் பார்சலை நான் சொல்லும் நபரிடம் அங்கு கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர். அதன் பேரில் பாலையா கடந்த 14ஆம் தேதி துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் சொன்ன நபர் மதுரை விமான நிலையத்திற்கு வரவில்லை அதனால் பாலையா மதுரையிலிருந்து கடலூர் மாவட்டம் கறிவேப்பலங்குறிச்சி அருகே உள்ள பேரலையூர் கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு மதுரை விமான நிலையத்திலிருந்து வாடகை காரில் வந்துள்ளார்.
பின்னர் பாலையா தான் கொண்டு வந்த பெட்டியை மாமியார் ராணியிடம் கொடுத்து இதனை மறைத்து வையுங்கள் இதை நான் வந்து கேட்கும் வரை யாரிடமும் கொடுக்க கூடாது என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்று விட்டார். இந்த நிலையில் துபாயில் பார்சல் கொடுத்து மதுரையில் வாங்கி கொள்வதாக கூறியிருந்த நபர்கள் பாலையா வீட்டிற்கு சென்று அவர் மனைவி முத்துலட்சுமிடம் கேட்டுள்ளார். அவர் தனது கணவர் இன்னும் வரவில்லை என்று கூறி அவர்களை திசை திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மீண்டும் அந்த நபர்கள் மதுரை விமான நிலையத்திற்கு சென்று அங்கு உள்ள கார் ஓட்டுனரிடம் விசாரித்துள்ளனர். அப்பொழுது அவர்கள் வாடைக்குச் சென்ற இடத்தை காட்டியுள்ளனர். அங்கு சென்று ராணியிடம் அந்த கும்பல் கேட்டுள்ளனர். ராணி இருங்கள் என் உறவினர் ஒருவரை அழைத்து வருகின்றேன் என் மருமகனின் சொந்த ஊருக்குச் செல்வோம் அங்கு பெட்டியை வாங்கி கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் ராணி மற்றும் அவரது உறவினர் மற்றும் அந்த கும்பலுடன் பார்சல் பெட்டியை ஏற்றிக்கொண்டு பாலையாவின் சொந்த ஊரான தே.புடையூர் அருகே வரும் பொழுது நடுவழியிலேயே ராணி மற்றும் உறவினர் இரண்டு பேரிடமிருந்து நான்கு பேரைக் கொண்ட அந்த கும்பல் அவர்களிடம் இருந்து பெட்டியை பிடுங்கி பாதிவழியில் விட்டு விட்டு காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். பின்னர் மாமியார் ராணி மற்றும் அவரது உறவினர் வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் அதன் பேரில் வேப்பூர் போலீசார் தே. புடையூர் கிராமத்தில் இருந்த அதே கும்பலைச் சேர்ந்த ஐந்து நபர்களை பிடித்தனர்.
விசாரணையில் பாலையாவை துபாயில் தங்க கடத்தல்காரரிடம் அறிமுகப்படுத்தி வைத்த திருச்சியை சேர்ந்த குமரேசன், மற்றும் செல்வமணி, ஷாகுல் அமீது, காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்ராசு , திருச்சி சேர்ந்த விக்னேஷ் என தெரியவந்தது. பின்னர் இவர்களிடம் வேப்பூர் போலீசார் தனித்தனியாக விசாரணை செய்தனர் .
பாலையா கொண்டு வந்த பெட்டியை திறந்து 3 தங்க பிஸ்கட்டுகளை எடுத்து கொண்டு பெட்டியை மாமியார் ராணியிடம் கொடுத்து விட்டு சென்ற நிலையில் அந்த பெட்டியை கடலூர் வெடிகுண்டு சோதனை செயலிழப்பு குழுவினர் அந்த பெட்டியில் சோதனை நடத்தியபோது அதில் பேரிச்சை பழம், சாக்லேட் மற்றும் பிஸ்கட் மட்டுமே இருந்தது. பின்னர் பாலையாவை பிடித்த வேப்பூர் போலீசார் கடலூர் நுண்ணறிவு பிரிவு போலீசார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். பிறகு பாலையா குமரேசன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தப்பியோடிய நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
க்ரைம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion