கரூர்: காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவன் பிணமாக மீட்பு - பரிகாரத்திற்கு சென்ற இடத்தில் நேர்ந்த பரிதாபம்
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரின் வேகம் காரணமாக சுரேந்தர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டு மூழ்கினான்.
![கரூர்: காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவன் பிணமாக மீட்பு - பரிகாரத்திற்கு சென்ற இடத்தில் நேர்ந்த பரிதாபம் boy drowned in the kavery river and was rescued as a dead body TNN கரூர்: காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவன் பிணமாக மீட்பு - பரிகாரத்திற்கு சென்ற இடத்தில் நேர்ந்த பரிதாபம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/1717aa42c9cddd7077e0bf227b85c6491661237517979183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவன் பிணமாக மீட்டெடுக்கப்பட்டான். கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்திற்குட்பட்ட கழுகூர் பகுதியை சேர்ந்த கலையரசன் (வயது 26) என்பவருக்கு சில பிரச்சனைகள் இருந்து வந்த காரணத்தால் தனது ஊரில் பரிகாரம் செய்துள்ளார். பின்னர் பரிகாரம் செய்யப்பட்ட தகடை ஆற்றில் விடுவதற்காக குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றுப் பகுதிக்கு கடந்த 20ஆம் தேதி வந்தார்.
இவருடன் அதே ஊரைச் சேர்ந்த சுரேந்தர் (17), அருண்குமார் (22) ஆகிய இரண்டு பேரும் வந்தனர். அவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரின் வேகம் காரணமாக சுரேந்தர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டு மூழ்கினான். இதை பார்த்த கலையரசன் அவரை காப்பாற்ற முயற்சித்த போதும், சுரேந்தரை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து, தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு படை வீரர்கள், குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடந்த இரண்டு நாட்களாக காவிரி ஆற்றில் சல்லடை போட்டு தேடியும் சுரேந்தரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று குளித்தலை அருகே உள்ள தண்ணீர் பள்ளி காவிரி ஆற்றின் பகுதியில் நடுவில் உள்ள மேடான பகுதியில் ஒருவரது உடல் தண்ணீரில் மூழ்கியபடி இருந்துள்ளது. இதுகுறித்து, தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு வீரர்கள், குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமூக ஆர்வலர்கள் உதவியுடன் அந்த உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சுரேந்தர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்த்து சுரேந்தர் என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர், அவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)