(Source: ECI/ABP News/ABP Majha)
போபால் மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்… ஓட்டுனரின் வீடு இடிப்பு!
இந்த நிலையில் ஓட்டுநர் குறித்து தேடும்போது அவருடைய வீடு முறைகேடாக கட்டப்பட்டுள்ளது அறியப்பட்டது. அதனை தொடர்ந்து காவல் துறையினர் அவர் வீட்டை இடித்தனர்.
பள்ளிப் பேருந்தில் மூன்றரை வயது நர்சரி மாணவியை பேருந்து ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவை உலுக்கி உள்ள நிலையில் அந்த ஓட்டுனரின் வீடு தரைமட்டமாக இடிக்கப்பட்டுள்ளது.
நாட்டை உலுக்கிய சம்பவம்
கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று நடந்த இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் நடைபெற்றது. இதனை உறுதி செய்த போலீசார் தரப்பு வெளியிட்ட தகவல், மூன்றரை வயதான அந்த மாணவி பள்ளி முடிந்த பிறகு பேருந்தில் வீடு திரும்பியபோது இந்தக் குற்றம் நடந்துள்ளது என்றும் அந்த மாணவி அந்த மாநிலத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தன்று அந்த மாணவி வீடு திரும்பியதும் அவரது பையில் இருந்த மாற்று உடையை எடுத்து அவர் மாற்றியுள்ளதை அடையாளம் கண்ட அவரது தாய், அவர் படிக்கும் பள்ளியின் வகுப்பாசிரியர் மற்றும் முதல்வரை அணுகியுள்ளார். ஆனால், அவர்கள் உடையை தாங்கள் மாற்றவில்லை என மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்தக் குழந்தைக்கு உடலில் வலி இருப்பதாக சொல்ல, அவரிடம் கவுன்சிலிங் மேற்கொண்டபோது பள்ளிப் பேருந்து ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.
இருவர் கைது
அவர்தான் உடையையும் மாற்றியுள்ளார் என குழந்தை கூறியுள்ளார். மறுநாள் பள்ளிக்கு சென்று இது தொடர்பாக புகார் செய்தபோது, அந்த ஓட்டுநரையும் குழந்தை அடையாளம் காட்டியுள்ளார். திங்கள் அன்று குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து அந்த ஓட்டுநர் மற்றும் பெண் உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வீடு இடிப்பு
இந்த நிலையில் ஓட்டுநர் குறித்து தேடும்போது அவருடைய வீடு முறைகேடாக கட்டப்பட்டுள்ளது அறியப்பட்டது. அதனை தொடர்ந்து காவல் துறையினர் அவர் வீட்டை இடித்தனர். போபாலின் ஷாபுரா பகுதியில் உள்ள இடிபாடுகள் காவல்துறையின் மேற்பார்வையில் நடந்தன. முறைகேடான கட்டுமானம் என்று அதிகாரிகள் இடிப்பதற்கு அதிகாரப்பூர்வ காரணமாக கூறுகிறார்கள். அதிகாரிகள் கண்காணிப்பில், சுத்தியல் ஏந்திய நபர்கள், ஒரு சிறிய பாதையில் இருந்த வீட்டை இடித்தனர்.
நடவடிக்கைகள்
"குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றதாக நான் உறுதியாக உணர்கிறேன். பள்ளி நிர்வாகத்திடமும் போலீசார் விசாரிக்கப்பட்டு, இந்த விவகாரத்தில் தலைமறைவானது கண்டறியப்பட்டால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" ,என்று உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறினார். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) போபால் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து மூன்று நாட்களுக்குள் விரிவான அறிக்கையை கோரியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த, இணை இயக்குனர் நிலை அதிகாரி தலைமையில், 3 பேர் கொண்ட குழுவை, பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) போபால் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து மூன்று நாட்களுக்குள் விரிவான அறிக்கையை கோரியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த, இணை இயக்குனர் நிலை அதிகாரி தலைமையில், 3 பேர் கொண்ட குழுவை, பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்