NRI கணக்கிலிருந்து பணம் திருட முயற்சி.. ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேர் கைது!
ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்களின் உதவியோடு இக்கணக்கில் kyc படிவத்தில் இருக்கும் மொபைல் எண்ணிற்கு பதிலாக புதிய போலி சிம்கார்டு, செக் புக் உள்பட அனைத்தையும் புதிதாக ஏற்பாடு செய்துள்ளனர்.
![NRI கணக்கிலிருந்து பணம் திருட முயற்சி.. ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேர் கைது! Attempt to steal money from NRI account .. 12 arrested including HDFC Bank employee! NRI கணக்கிலிருந்து பணம் திருட முயற்சி.. ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேர் கைது!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/20/3692a6dbed730db6e1633c15ecd29a14_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டெல்லியில் என்.ஆர்.ஐ வங்கிக்கணக்கிலிருந்து பணத்தைத் திருட முயற்சி செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக 3 ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்திய அல்லாது வேறொரு நாட்டில் குடிபெயர்ந்தக் குடிமக்கள் non resident Indian அதாவது என்.ஆர்.ஐ என்று அழைக்கப்படுவார்கள். இவர்களில் பலர் தொழில் ரீதியாக இந்தியாவில் வங்கிக்கணக்குச் சேவைகளையும் கொண்டிருப்பார்கள். குறிப்பாக இந்திய வங்கித்துறையில் என்.ஆர்.ஐ சேமிப்புக் கணக்குகள் மற்றும் அதனை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது. மேலும் பல பாதுகாப்புகளும் வழங்கப்பட்டுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், இவர்களது வங்கிக்கணக்கிலிருந்து வங்கி ஊழியர் உள்பட பலர் பணத்தை திருட முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
NRI கணக்கில் இருந்து பணம் திருட முயற்சி:
சமீபத்தில் NRI வங்கிக்கணக்கில் இருந்து மட்டும் அதிகப்படியான பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து வாடிக்கையாளர்களின் பல்வேறு புகார்களையடுத்து இப்பிரச்சனைக்குறித்து வங்கி நிர்வாகம் கவனித்து வந்தது. பின்னர் தொழில்நுட்ப வாயிலான திருட்டு என்பதால் இதனை சைபர் கிரைம் போலீசாரிடம் வங்கி நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ச்சியாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் என்ஆர்ஐ வங்கிக்கணக்கில் அதிகளவு பணம் இருப்பதையடுத்து இதனை எப்படியாவது திருட வேண்டும் என நினைத்து ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்களின் உதவியோடு இக்கணக்கில் kyc படிவத்தில் இருக்கும் மொபைல் எண்ணிற்கு பதிலாக புதிய போலி சிம்கார்டு, செக் புக் உள்பட அனைத்தையும் புதிதாக ஏற்பாடு செய்துள்ளனர். இதனைப்பயன்டுத்தி பல முறை பணம் எடுக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தியதில், என்ஆர்ஐ தொழிலதிபர் ஒருவரின் கணக்கிலிருந்து 5 கோடி ரூபாய் வரையில் பணத்தை திருட முயற்சித்தது தெரியவந்துள்ளது. மேலும் 32 வயதான ஹெச்டிஎஃப்சி வங்கி மேலாளர் மற்றும் வங்கியின் தொழில்நுட்ப குழுவின் ஆதரவோடு திருட முயற்சித்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான என்.ஆர்.ஐ வங்கிப்பணத்தைத் திருட முயற்சி செய்தக் குற்றத்திற்காக டெல்லி,ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் உள்பட 12 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கொள்ளையடித்த பணத்தில் 50 சதவீதத்தை வங்கி நிர்வாகிகளுக்குக் கொடுக்க முடிவெடுத்துள்ளனர். இதோடு அமெரிக்க மொபைல் எண்ணையும் இந்திய எண்ணிற்கு மாற்ற முயற்சிகள் நடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் வங்கி வாடிக்கையாளர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)