சீண்டிப்பார்த்த கணவர்... கிரிக்கெட் பேட்டால் கதையை முடித்த மனைவி!
ராஜராமின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மது... பல குடும்பங்களின் இன்பத்தை பறித்திருக்கிறது. பல பெண்களை விதவையாக்கியிருக்கிறது. சில நேரங்களில் பெண்களை கொலையாளிகளாகவும் மாற்றியிருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் விருதுநகரில் நடந்திருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம். 45 வயதான இவர், டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ரேவதி(36) என்ற மனைவியும், 9 வயது மற்றும் 8 வயதில் இரு மகன்களும் உள்ளனர். ராஜாராம் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தினமும் மது போதையில் வந்து வீட்டில் தகராறு செய்வது, மனைவியை அடித்து உதைப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், பின்னர் சமரசம் ஏற்படுவதுமாய் நாட்கள் நகர்ந்திருக்கிறது. இந்நிலையில் சம்பவத்தன்று நல்ல போதையில் வந்த ராஜாராம், வழக்கம் போல மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ரேவதி, ராஜாராம் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் நீண்ட நேரம் அவர்களது சண்டை நீடித்துள்ளது. இதில் ரேவதியை ராஜாராம் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரேவதி, தனது மகன் பயன்படுத்து கிரிக்கெட் பேட்டை எடுத்து ராஜாராம் தலைமையில் சரமாறியாக தாக்கினார். படுகாயம் அடைந்த ராஜாராம், ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். ராஜராமின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த போலீசார் சடலத்தை கைபற்றியதுடன், ரேவதியையும் கைது செய்தனர். தந்தை இறந்த நிலையில், தாய் கைதாகி சிறை செல்லும் சூழலில் அவர்களின் இரு மகன்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இன்றைய முக்கியச் செய்திகள் சில...
பெற்ற குழந்தை முன்னிலையில் திருமணம் செய்த பெற்றோர்... காதலி முதல் கர்ப்பம் வரை நடந்த சுவாரஸ்யம்!https://t.co/nkJkNTFBT9#Viruddhachalam #Marriage #News
— ABP Nadu (@abpnadu) October 23, 2021
ஊராட்சி தலைவராக தலித்: எதிர்ப்பு தெரிவித்து 5 வார்டு கவுன்சிலர்கள் ராஜினாமா! ஒருவர் பதவியே ஏற்கவில்லை!#wardmembers #dalitissuehttps://t.co/NQGuGc2ncA
— ABP Nadu (@abpnadu) October 23, 2021
ICC T-20 WC: நமிபியாவை வழிநடத்திய சிஎஸ்கே வீரர்: பழைய சிஎஸ்கே அணி பிடியில் உலககோப்பை!https://t.co/HhTP5sbRmn#ICCT20WorldCup2021 #Namibia #Cricket #AlbieMorkel #CSK #ICCT20WorldCup
— ABP Nadu (@abpnadu) October 23, 2021
Watch video: அணியில் இல்லாத கணவர்... ஆனாலும் ஆட்டம் போட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி!https://t.co/jKDnWaIGja#ICCT20WorldCup2021 #IndianCricket #chahal #Dance
— ABP Nadu (@abpnadu) October 23, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்