மேலும் அறிய

எங்களிடமே பணம் கேட்கிறாயா? - மது பாரில் உரிமையாளரை தாக்கிய 5 ரவுடிகள் கைது

’’மாதந்தோறும் எங்களுக்கு 5,000 ஆயிரம் மாமூல் தர வேண்டும், இல்லையென்றால்  கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக புகார்’’

புதுச்சேரி வெள்ளாளர் வீதியில் தனியார் மது பாருடன் கூடிய தங்கும் விடுதி உள்ளது. அங்கு நேற்று முன் தினம் மாலை விடுதி உரிமையாளர் ராஜேஷ் குமார் (31)  இருந்தார். அப்போது 5 பேர் அங்கு வந்து மது குடித்தனர். அதற்கான பணம் 1,600 ரூபாயை கேட்டபோது, எங்களிடமே பணம் கேட்கிறாயா? என்று கூறி ராஜேஷ் குமாரை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. ராஜேஷ் குமாரிடம் இருந்து 1,000 ரூபாயை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.

சிறிது நேரம் கழித்து 5 பேரும் மீண்டும் திரும்பி வந்து அங்கு பணியில் இருந்த ஊழியர் திவான் (18) என்பவரை கடத்திச் சென்று அந்த பகுதியில் உள்ள இருட்டான இடத்தில் வைத்து தாக்கி மாதந்தோறும் எங்களுக்கு 5,000 ஆயிரம் மாமூல் தர வேண்டும், இல்லையென்றால்  கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் திவானை விடுவித்து விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ்குமார், திவான் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


எங்களிடமே பணம் கேட்கிறாயா? - மது பாரில் உரிமையாளரை தாக்கிய 5 ரவுடிகள் கைது

இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது ராஜேஷ்குமார், திவான் ஆகியோரை தாக்கியது கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (28) மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று விக்கியை கைது செய்தனர்.


எங்களிடமே பணம் கேட்கிறாயா? - மது பாரில் உரிமையாளரை தாக்கிய 5 ரவுடிகள் கைது

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், விக்கியின் கூட்டாளிகளான கோவிந்த சாலை கல்வே பங்களாவை சேர்ந்த ஜெய் என்ற ஜெயகுமார் (26), குபேர் நகரை சேர்ந்த அருண் என்கிற சோனி (28), கென்னடி நகரை சேர்ந்த நாகராஜ் என்கிற பாம்பு நாகராஜ் (28), கண்டாக்டர் தோட்டம் அரசு குடியிருப்பை சேர்ந்த முகேஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனே அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்களில் விக்கி, ஜெயகுமார், அருண் ஆகிய 3 பேர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ரவுடிகள் பட்டியலில் இருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பரிசோதனைக்கு பின் ரவுடிகள் 5 பேரையும்  கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget