மேலும் அறிய

Actor Vijay Babu : நடிகர் விஜய் பாபு மீது மேலும் ஒரு பெண் பாலியல் குற்றப் புகார்..

மலையாள திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது முன்னணி நடிகை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸில் புகார் கொடுத்திருந்தார்

மலையாள திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது முன்னணி நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸில் புகார் கொடுத்த நிலையில் இன்னொரு பெண் தன்னை விஜய் பாபு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முகநூலில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு போலீஸ் லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பியுள்ளது. இந்நிலையில், விஜய் பாபு மீது இன்னொரு பெண்ணும் புகார் கூறியுள்ளார்.

பிரபல நடிகை சொன்னது என்ன?

முன்னதாக பிரபக நடிகை தனது புகாரில், “எனது தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு, என்னை காப்பாற்றுபவராக, எனது மீட்பராக விஜய் பாபு நடந்து கொண்டார். ஆனால் நல்லவர் என்ற போர்வையில், பின்னர் அவர் என்னை பாலியல் ரீதியாக சுரண்டினார். வன்கொடுமை மற்றும் உடல் ரீதியான தாக்குதல் தவிர, விஜய் பாபு மது மற்றும் ‘போதை மகிழ்ச்சி மாத்திரை’ என்ற போதைப்பொருளையும் உட்கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்தினார்.

திரையுலகில் அவரது செல்வாக்கு காரணமாக, மற்றவர்களிடம் நான் அனுபவித்த பாலியல் சுரண்டல் பற்றி விவாதிப்பதில் எனக்கு பயம் இருந்து வந்தது. விஜய் பாபுவின் வலையில் மேலும் பல பெண்களும் சிக்கியுள்ளனர் என்று அறிந்தேன். அவர் என்னுடைய நிர்வாண வீடியோவை பதிவு செய்து, அதனை காண்பித்து மிரட்டியுள்ளார்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, விஜய் பாபு நேற்று திடீரென சமூக வலைத்தள நேரலை அமர்வு மூலம் உரையாடினர். அப்போது அவர், பாதிக்கப்பட்ட அந்த நடிகையின் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தினார். மேலும், வேண்டுமென்றே அந்த நடிகையின் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை வெளியிட்டதாகவும் விஜய் பாபு கூறினார். தான் குற்றமற்றவன் என்று கூறிய விஜய் பாபு, உண்மையான பலி ஆடு நான்தான் என்று கூறினார். அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக, அந்த பெண் நடிகையை தனக்கு தெரியும் என்று ஒப்புக்கொண்டார். மேலும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய நடிகைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தயாரிப்பாளர் விஜய் பாபு நேரலை மூலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய புகார் என்ன?

இதற்கிடையில் முகநூலில் இன்னொரு பெண் விஜய் பாபுவுக்கு எதிராக MeToo புகார் கூறியுள்ளார். அவர் தனது முகநூலில், நான் முதன்முறையாக ஒரு சினிமா பற்றி பேச விஜய் பாபுவை சந்திக்க சென்றிருந்தேன். வெகு நேரம் படம் குறித்து பேசினோம். அவர் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையளித்தன. அப்போது அவர் மது அருந்திக் கொண்டிருந்தார். எனக்கும் தந்தார். நான் குடிப்பதில்லை என்று கூறி மறுத்துவிட்டேன். என்னைப் பற்றியும் குடும்பம் பற்றியும் கேட்டார். எனது பிரச்சனைகளை அறிந்து கொண்ட அவர் எனக்கு உதவுவதாகக் கூறினார். எனக்கு அவர் மீது மரியாதை வந்தது. ஆனால் அடுத்த நொடியே என் மீது பாய்ந்து என் உதட்டில் முத்தம் கொடுக்க முயன்றார்.

நான் அவரைப் புறந்தள்ளிவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினேன். அதன்பின்னர் எனது மலையாள சினிமா கனவையே நான் மறந்துவிட்டேன். என்னைப் போல் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டனரோ?" என்று அப்பெண் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Embed widget