மேலும் அறிய

Crime: பிளஸ் 1 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த இரும்பு வியாபாரி கைது!

பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட முயன்ற போது, சிறுமிக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது. உடனடியாக சிறுமியை, டூவீலரில் ஏற்றி வந்து ரோட்டோரம் இறக்கி விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

சேலம் மாநகர் அழகாபுரம் பகுதியில், நேற்று முன்தினம் மாலை 16 வயது உடைய பிளஸ் 1 மாணவி, சாலையோரம் மயங்கிய நிலையில் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து, மயங்கிய நிலையில் இருந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மாணவி மது போதையில் இருந்துள்ளார். அவரால் உட்கார கூட முடியவில்லை. இதனால் அச்சிறுமிக்கு கட்டாயமாக மதுவை ஊற்றிக்கொடுத்த நபர்கள், பாலியல் சீண்டலில் ஈடுபட்டனரா? என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும், அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் அஸ்வினி, அம்மாப்பேட்டை மகளிர் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

Crime: பிளஸ் 1 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த இரும்பு வியாபாரி கைது!

பின்னர், அச்சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால், போலீசாரால் விசாரணை நடத்த முடியவில்லை. அதே நேரத்தில் சம்பவ இடத்தில் நடந்த விசாரணையில், வாலிபர் ஒருவர் அச்சிறுமியை டூவீலரில் கொண்டு வந்து இறக்கி விட்டது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியிருந்த படத்தை வைத்து விசாரித்தனர். இதில் ராமன்குட்டையை சேர்ந்த கோவிந்தசாமி (36) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். அச்சிறுமியும், அதே பகுதியில் உள்ள மற்றொரு இரும்பு கடையில் வேலை செய்துள்ளார். அப்போது இரு வருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. கோவிந்த சாமிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

Crime: பிளஸ் 1 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த இரும்பு வியாபாரி கைது!

இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமியை அங்குள்ள காட்டு பகுதிக்கு கோவிந்தசாமி அழைத்து சென்றுள்ளார். அப்போது குளிர்பானத்தில் மதுவை ஊற்றி, குடிக்க வைத்துள்ளார். சிறுமியும் அதனை குடித்தார். சிறுமி என்பதால் உடனடியாக போதை தலைக்கேறியது. இதனை பயன்படுத்திய அவர், பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட முயன்ற போது, சிறுமிக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது. இதனால் பயந்து போன அவர், உடனடியாக சிறுமியை, டூவீலரில் ஏற்றி வந்து ரோட்டோரம் இறக்கி விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே நேரத்தில் சிறுமிக்கான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget