மேலும் அறிய
வேடிக்கை பார்த்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்... மின்கம்பம் முறிந்து விழுந்ததில் உயிரிழப்பு..
கூடுவாஞ்சேரி அருகே காலி இடத்தில் உள்ள முள் செடிகளை அகற்றும் போது மின் கம்பம் முறிந்து விழுந்ததில் வேடிக்கை பார்த்த பெண் பலி..

அபிராமி
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் பகுதியில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில், காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு பண்ணை உள்ளது. இதற்காக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த உலகநாதன் மற்றும் அவரது மனைவி அபிராமி மற்றும் 3 பிள்ளைகளுடன், கடந்த சில வருடங்களாக மாந்தோப்பு பண்ணையில் உள்ள வீட்டில் தங்கி தோட்ட வேலைகளை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இவர்களது, பண்ணைக்கு அருகே வினோத் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மூற்செடிகளை அகற்றுவதற்காக ஜே.சி.பி இயந்திரத்தை வரவழைத்து அங்குள்ள முள் செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஜே.சி.பி இயந்திரம் தென்னை மரத்தை அகற்றும் பொழுது அந்த மரமானது அருகே உள்ள மின்சார வயர்கள் மீது சாய்ந்ததில் இரண்டு மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்தது இதில் மின் கம்பம் அருகே நின்று கொண்டு ஜேசிபி அகற்றும் பணியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அபிராமி மீது மின்கம்பம் விழுந்ததில் படுகாயம் அடைந்து கீழே விழுந்துள்ளார்

அவருடைய உறவினர்கள் அபிராமியை மீட்டு கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கூடுவாஞ்சேரி போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய ஜேசிபி ஓட்டுனரை தேடி வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது , சம்பந்தப்பட்ட பின் அபிராமி என்பவர் அருகில் வேலைப்பணிகள் நடைபெற்று வந்திருப்பதை வேடிக்கை பார்க்க வந்துள்ளார். இதனை அடுத்து தற்செயலாக ஏற்படுத்த விபத்தின் காரணமாக, மின் கம்பம் முறிந்து விழுந்து உயிரிழந்ததாக, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர் .
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















