நடிகை மீனு குரியன் கைது: 10 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த அதிர்ச்சி! சிறுமிக்கு நேர்ந்த கொடுமை என்ன?
சென்னை அண்ணா நகரில் சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள நடிகை கைது செய்யப்பட்டாா்.
கேரள நடிகை மீனு குரியன், கடந்த 2014-ஆம் ஆண்டு எா்ணாகுளம் அருகே மூவாட்டுபுழா பகுதியைச் சோ்ந்த தனது தூரத்து உறவினரின் 16 வயது மகளை நடிக்க வைப்பதாகக் கூறி, சென்னை அண்ணா நகருக்கு அழைத்து வந்தாா். அங்குள்ள ஒரு ஹோட்டலில் இருவரும் தங்கினா். அப்போது மினு முனீா், 4 பேரை அந்தச் சிறுமியிடம் அறிமுகப்படுத்தியுள்ளாா். அவா்கள் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு மீனு குரியனும் உடந்தையாக இருந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து அந்தச் சிறுமி ஹோட்டலில் இருந்து வெளியேறியுள்ளாா்.
கடந்த 2014-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் அந்த கேரள சிறுமி. இவரின் சித்தி மகள் நடிகை மீனு குரியன் (Meenu kuriyan). பள்ளி விடுமுறையிலிருந்த சிறுமியை நடிகை, கேரளாவிலிருந்து சென்னை அண்ணாநகருக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக நடிகை மீனு குரியன் கூறியதாக தெரிகிறது. அதையொட்டி சிறுமியை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் நடிகை மீனு குரியன். அங்கு நடிகைக்குத் தெரிந்த 5 பேர் வந்திருந்தனர். அவர்களிடம் சிறுமிக்கு நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார் நடிகை . அப்போது அந்த 5 பேரில் ஒருவர், சிறுமியின் கன்னத்தை கிள்ளியிருக்கிறார். இன்னொரு நபர், சிறுமியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறார். இவர்களின் இந்த பாலியல் டார்ச்சரால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். இந்தச் சம்பவம் நடக்கும் போது அவர் சிறுமி என்பதால் தைரியமாக காவல் நிலையத்தில் புகாரளிக்கவில்லை.
இந்தச் சம்பவம் நிகழ்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அந்தச் சிறுமி இதை தனது பெற்றோரிடம் அண்மையில் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து பெற்றோா் மூவாட்டுபுழா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், இந்தச் சம்பவம் சென்னை திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நிகழ்ந்தது என்பதால், வழக்கு திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய நடிகை மீனு குரியனை கேரளத்தில் திருமங்கலம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடம் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். இதில் தொடா்புடயை 4 பேரும் அடையாளம் காணப்பட்டு, விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்று போலீஸாா் தெரிவித்தனா். மேலும் போலீஸார் புதிதாக வழக்குப்பதிந்து புகார் கொடுத்த பெண்ணிடம் விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீஸார், கேரளாவுக்குச் சென்று பாலியல் டார்ச்சருக்கு காரணமாக இருந்த நடிகை மீனு குரியனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் விசாரணைக்குப்பிறகு நடிகை மீனு குரியன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.





















