25 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஸ்டான்ட் அப் காமெடியன்…? காவல்துறை வழக்குப்பதிவு!
அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், ஸ்டான்ட் அப் காமெடியன் கியாலி மீது மானசரோவர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூரில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நகைச்சுவை நடிகர் கியாலி சஹாரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 25 வயது பெண் ஒருவரை ஹோட்டல் அறையில் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்த ஸ்டான்ட்-அப் காமெடியன்
ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அறையில் 25 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல நகைச்சுவை நடிகர், ஸ்டான்ட் அப் காமெடியன், கியாலி சஹாரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர். அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், ஸ்டான்ட் அப் காமெடியன் கியாலி மீது மானசரோவர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மது அருந்தி இருந்துள்ளார்
காவல்துறையின் கூற்றுப்படி, திங்களன்று நடந்த இந்த சம்பவத்தின் போது அந்த நகைச்சுவை நடிகர் கியாலி மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஆர்வலரான இவர், மானசரோவர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், அவர் செய்யும் வேலைக்கு உதவுவதாகக் கூறி அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
வழக்குப் பதிவு
"இதன்மூலம் பாதிக்கப்பட்டப் பெண் அளித்த புகாரின் பேரில் நகைச்சுவை நடிகர் கியாலி சஹாரன் மீது ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று மானசரோவர் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் சந்தீப் யாதவ் தெரிவித்தார். ஸ்ரீகங்காநகரைச் சேர்ந்த இந்த பெண் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் ஆக பணிபுரிந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இரண்டு பெண்களை அழைத்து சென்ற கியாலி
பாதிக்கப்பட்ட இந்த பெண், மற்றொரு பெண்ணுடன் இணைந்து, கியாலி சஹாரனுடன் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு வேலைக்காக உதவி கோரி தொடர்பு கொண்டுள்ளனர். போலீசாரின் கூற்றுப்படி, கியாலி ஒரு ஹோட்டலில் இரண்டு அறைகளை புக் செய்துள்ளார். ஒன்று தனக்கும் மற்றொன்று அந்த இரண்டு பெண்களுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கியாலி சஹாரன் பீர் குடித்ததாகவும், பெண்களிடம் வலுக்கட்டாயமாக பீர் குடிக்கச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. பின்னர், பெண்களில் ஒருவர் அறையை விட்டு வெளியேறிய நிலையில், அவர் மற்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆம் ஆத்மி கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் யோகேந்திர குப்தாவை தொடர்பு கொண்டபோது, "ஆம் ஆத்மி கட்சியில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர், அவரும் (கியாலி) அவர்களில் ஒருவர். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன செய்கிறார் என்பது வேறு விஷயம். அதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று கூறியுள்ளார்.