Watch video: இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடும் மர்ம கும்பல்.. சிசிடிவி காட்சியால் நெல்லையில் பரபரப்பு
இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறா வண்ணம் சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நெல்லை மாநகரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்களை திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் திருட்டு சம்பவம் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இருசக்கர வாகனம் திருடு போவது குறித்த புகார்களும் அவ்வப்போது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பாளையங்கோட்டை காவல் நிலையம் அருகே உள்ளது குரு பரம்பரை தெரு. இத்தெருவில் 3 பேர் கொண்ட மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தை திருடி சென்று உள்ளனர்.
நெல்லை மாநகர் பாளையங்கோட்டை பகுதிகளில் இரவு நேரத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனத்தை திருடும் கும்பல்... சிசிடிவி காட்சியால் பரபரப்பு @abpnadu @SRajaJourno pic.twitter.com/HAMHaZDyHP
— Revathi (@RevathiM92) August 24, 2022
இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதலங்களில் பரவி வரும் சூழலில் காவல் நிலையம் அருகிலேயே இத்திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பல் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அங்குள்ள தெருக்களை அங்குமிங்கும் சுற்றி நோட்டமிட்டு செல்கின்றனர். பின்னர் சையிடு லாக் செய்யாத வாகனத்தை நோட்டமிட்டு அதை திருடி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. காவல்நிலையம் அருகிலேயே நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரவு நேரத்தில் இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடக்கும் பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறா வண்ணம் சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்