மேலும் அறிய

Crime: திருமணமாகாமல் பிரசவித்த பெண்.. குடும்பத்தோடு குழந்தையை கொன்ற கொடூரம்..

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அருகே கடவந்தரா என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பனம்பள்ளி வித்யா நகரில் நேற்று காலை துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கேரளாவில் பிறந்த சில மணி நேரத்திலேயே குழந்தையை கொடூரமாக கொன்ற குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அருகே கடவந்தரா என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பனம்பள்ளி வித்யா நகரில் நேற்று காலை துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலையில் கேட்பாரற்று ஒரு பிளாஸ்டிக் கவர் கிடந்துள்ளது. பார்ப்பதற்கு யாரோ தவற விட்ட பொருளுடன் கிடப்பதாக நினைத்து அந்த தொழிலாளர்கள் கவரை எடுத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதனுள் தொப்புள் கொடி கூட வெட்டப்படாத நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக எர்ணாகுளம் தெற்கு காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான எர்ணாகுளம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தான் அந்த பிளாஸ்டிக் கவர் வீசப்பட்டதை உறுதி செய்தனர். உடனே அங்கிருந்த அனைத்து வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தியதில் ஒரு வீட்டின் கழிவறையில் மட்டும் ரத்தக்கறை இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த வீட்டில் இருப்பவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.  அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

அந்த வீட்டில் திருமணமாகாத 20 வயது இளம்பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த விஷயம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் மறைத்த பெற்றோர், குழந்தை பிறக்கும் வரை காத்திருந்துள்ளனர். நேற்று வீட்டில் வைத்து அப்பெண் குழந்தையை பெற்றுள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் அந்த குழந்தையை கூரியர் கவரில் சுற்றி அப்பெண்ணின் தாய் மற்றும் தந்தை 5வது மாடியில் இருந்து வீசி கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தாய், தந்தை, இளம்பெண் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

கூரியர் கவரில் இருந்த பார்கோடை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் சம்பந்தப்பட்ட இளம்பெண்  முகவரி காட்டியதும் இந்த வழக்கில் குற்றம் செய்தவர்களை எளிதாக காவல்துறை கண்டறிய உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

வீட்டிலேயே கிளினிக்.. சிக்கிய கருமுட்டை விற்பனை கும்பல்! ஒரே பெண்ணிடம் 30-க்கும் மேற்பட்ட முறை!
வீட்டிலேயே கிளினிக்.. சிக்கிய கருமுட்டை விற்பனை கும்பல்! ஒரே பெண்ணிடம் 30-க்கும் மேற்பட்ட முறை!
மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
புருஷனை போட்டுத்தள்ளிவிட்டு! பக்கத்து ரூமில் மனைவி செய்த காரியம்! கோர்ட் பரபர தீர்ப்பு!
புருஷனை போட்டுத்தள்ளிவிட்டு! பக்கத்து ரூமில் மனைவி செய்த காரியம்! கோர்ட் பரபர தீர்ப்பு!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget