மேலும் அறிய
Advertisement
Crime : செங்கல்பட்டில் கொடூரம்.. காரில் கடத்திச்சென்று இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது பெண் , சென்னை புறநகர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில், மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே சென்னை புறநகர் பகுதியில் உள்ள பிரபல கல்லூரியில் இளங்கலை படிப்பு முடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனது நண்பர்கள் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் சென்னைக்கு செல்வதற்காக, செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் வரும் வழியில் காரில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் இளம்பெண்ணை கடத்தி, காரிலேயே வைத்து ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனை அடுத்து காரிலேயே அந்த பெண்ணை கடத்திச் சென்று, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள சாலவாக்கம் பகுதியில் வைத்து மற்றொருவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணை காரில் வைத்து மிரட்டி உள்ளனர்.
இதனை அடுத்து அந்த பெண்ணை சாலவாக்கம் பகுதியில் இறக்கிவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதன் அடுத்த சம்பந்தப்பட்ட பின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் புகாரை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி தப்பி ஓடிய நான்கு பேரை தேடி வருகின்றனர்.
இந்த கும்பலில் நெருங்கி பழகிவந்த ஆண் நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion