Alternative to Gold: தங்கம் பின்னாடியே ஓடாதீங்க! வேறு எதில், எப்படி முதலீடு செய்யலாம்- இதோ டிப்ஸ்!
விண்ணைப் பிளக்கும் விலையில் தங்கம்; வேறு எதில், எப்படி முதலீடு செய்யலாம்- இதோ டிப்ஸ்!

முதலீடு என்று வரும்போது தங்கத்தின் பின்னாலேயே எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு ஓடுகிறோம். ஆனால் வெள்ளியிலும் முதலீடு செய்வது சிறந்த வாய்ப்பாக அமையும். 2020ஆம் ஆண்டு ஒரு கிராம் வெள்ளியின் விலை 63 ரூபாய். 5 ஆண்டுகள் கழித்து இன்று 2025ஆம் ஆண்டில், ஒரு கிராம் வெள்ளியின் விலை 140 ரூபாய். சோலார் பேனல், மின்னணு வாகனங்கள் என பல்வேறு தேவைகளுக்கு வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.
அதிகரிக்கும் தேவையும் மதிப்பும்
இதனால் வெள்ளியின் தேவையும் மதிப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் வெள்ளியின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் 50 சதவீத அளவுக்கு வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. தங்கத்திற்கு அடுத்தபடியாக வெளியில் நாம் முதலீடு செய்யலாம்.
என் முதலீட்டுக்கு தங்கம் மட்டுமே ஒரே வாய்ப்பு என்று யோசிக்காமல், வெள்ளியை நோக்கியும் முதலீட்டைச் செய்ய ஆரம்பிங்கள்.

டிஜிட்டல் வடிவில் தங்கம்
அதேபோல தங்க நகைகளை நேரடியாக வாங்காமல் டிஜிட்டல் வடிவில் வாங்குவது நல்லது. 100 ரூபாய்க்கு கூட தங்கத்தை வாங்கக் கூடிய வாய்ப்பு டிஜிட்டலில் வழங்கப்படுகிறது.
எவ்வளவுதான் விலை உயர்ந்தாலும் தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடு குறைவதே இல்லை. தங்கத்தை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டிக்கொண்டே இருக்கின்றனர் இப்போது தங்கம் வாங்கலாமா கூடாதா?
நம்மில் பலர் தங்க நகை கடைகளில் 11 மாத நகைச்சுவை போடுவதை வழக்கமாக வைத்திருப்போம். அதை காட்டிலும் டிஜிட்டல் வடிவில் தங்கத்தின் முதலீடு செய்வது சிறந்த முதலீடாக இருக்கும்.
ஏனெனில் டிஜிட்டல் கோல்டில் 11 மாதம் முடிவுக்குப் பிறகு அந்த தங்கத்தை எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்காது. எப்போது தேவை இருக்கிறதோ, அப்போது நகையாக மாற்றிக் கொள்ளலாம் அல்லது அதை விற்று பணமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
கோல்ட் ஈடிஎஃப் சந்தையில் முதலீடு
அதேபோல் தங்கம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கோல்ட் ஈடிஎஃப் சந்தையில் முதலீடு செய்யலாம். அதில் வரக்கூடிய லாபத்தை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளலாம். தங்கத்தை வீட்டில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.























