மேலும் அறிய

ITR Refund Rules: நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்தீர்களா? ரீஃபண்ட் பணம் வர எவ்வளவு நாளாகும்? எப்படி பார்ப்பது?

வருமான வரி தாக்கல் செய்தவர்கள் ரீஃபண்ட் பணம் திரும்பப் பெற 20 முதல் 25 நாட்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITR Refund Rules: வருமான வரி தாக்கல் செய்தவர்கள் ரீஃபண்ட் பணம் திரும்பப் பெற 20 முதல் 25 நாட்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வருமான வரி கணக்கு தாக்கல்:

2022-23 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 31ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. 6.77 கோடி பேர் தங்களது கணக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜுலை மாதம் 31ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 5.83 கோடி கணக்குகளை காட்டிலும், நடப்பாண்டில்  16.1% கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைத்தாலும், கூடுதல் அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், வருமான வரிதாக்கல் செய்து ரீஃபண்ட் பணம் எப்போது வரும் என அனைவரும் காத்திருக்கின்றனர்.

 ரீஃபண்ட் பணம் எப்போது வரும்?

உங்கள் வருமான வரிக் கணக்கை நீங்கள் தாக்கல் செய்தவுடன், வருமான வரி துறை  நிதியாண்டில் நீங்கள் கூடுதலாக வரி செலுத்தி இருந்தால் பணத்தைத் திரும்ப கொடுக்கிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்து சரிபார்த்த பிறகு எவ்வளவு நாட்களில் பணத்தை திரும்பப் பெற முடியும் என்று வரி நிபுணர் பல்வந்த் ஜெயின் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ”வழக்கமாக இந்த பணிக்கு 20 முதல் 25 நாட்கள் வரை ஆகும். கடந்த நிதியாண்டை பார்க்கும்போது, 80 சதவீத வரி செலுத்துவோரின் பணத்தை 30 நாட்களுக்குள் திருப்பி வழங்கப்பட்டது.  அதற்கு குறைவான நாட்களிலையே பணத்தை நீங்கள் இந்தாண்டு திரும்பப் பெறுவீர்கள். பணத்தை திரும்பப் பெறுவது தொடர்பான அனைத்து தகவலையும் வருமான வரித்துறை உங்களுக்கு தெரிவிக்கும். வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு எவ்வளவு பணத்தை திரும்பப் பெறுவீர்கள் என்பதை வருமான வரித்தறை மெசேஜ் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும்" என்றார். 

எப்படி பார்ப்பது?

  • முதலில், உங்கள் வருவான வரி ரீஃபண்ட்(Income Tax Refund) நிலையைச் சரிபார்க்க, https://www.incometax.gov.in/iec/foportal/என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும். 
  • ’வரித் திரும்பப்பெறுதலின் நிலை’ (Status of Tax Refunds) என்பதை கிளிக் செய்து, உங்கள் PAN மற்றும் உங்கள் பணத்தைத் திரும்பப்பெறுதல் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு ஆண்டை (assessment year-AY) உள்ளிடவும்.
  • அதில் உங்கள் ரீபண்ட் தொகையின் நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். பின்பு, அந்த தொகை 30 நாட்களுக்குள் உங்கள் வங்கி கணக்கிற்கு திரும்பப் பெறப்படும்.

தரவுகள் தவறாக இருக்கக் கூடாது:

வருமான வரி தாக்கல் செய்யும்போது அளிக்கும் தகவல்கள் உண்மையானதாக இருத்தல் அவசியம்.  சிலர், அவர்களின் ஆதார் கார்டில் தொடங்கி, அடிப்படை ஆவணங்கள் என அனைத்து தரவுகளின் விவரங்களையும் சரியான நேரத்தில் பதிவு செய்யாமல் இருப்பது மிகவும் தவறானது ஆகும். நீங்கள் அளிக்கும் ஆவணங்கள் உள்ள தகவல்கள் சரியானதாக இருக்க வேண்டும். ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளில் மாறுபட்ட வகையில் தகவல் இருக்கக் கூடாது. மேலும், வங்கி கணக்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்படாமல் இருப்பது, தவறனா தொடர்பு எண்கள், முகவரி, மெயில் ஆகியவை தவறாக இருப்பினும் உங்கள் வருமான வரி ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Budget 2026 LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் - அமைச்சர் மரிய வில்சன்
நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் - அமைச்சர் மரிய வில்சன்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
Embed widget