இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 29.04.2021
Chennai Petrol, Diesel price: சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.92.43-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.85.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.