(Source: ECI/ABP News/ABP Majha)
Tata Sons Chairman: டாடா குழுமத்தின் நிர்வாக குழு தலைவராக என்.சந்திரசேகர் மீண்டும் நியமனம்...!
டாடா சன்ஸ் குழுமத்தின் நிர்வாக குழு தலைவராக என். சந்திரசேகரின் பதவிக்காலம் மீண்டும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக திகழ்வது டாடா சன்ஸ் குழுமம். பிரபல கோடீஸ்வரரான ரத்தன் டாடாவிற்கு சொந்தமான இந்த குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் லட்சம் தொழிலாளர்கள் நாடு முழுவதும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இந்த குழுமத்தின் நிர்வாக தலைவராக என்.சந்திரசேகர் பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
டாடா சன்ஸ் குழுமத்தின் நிர்வாக குழு கூட்டம் மும்பையில் உள்ள பாம்பே ஹவுசில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ரத்தன் டாடா அழைக்கப்பட்டிருந்தார். இந்த கூட்டத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் நிர்வாக தலைவராக பொறுப்பு வகித்து வரும் என். சந்திரசேகரின் பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதாக டாடா நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவிற்கு நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, அவரது பதவிக்காலம் அதிகாரப்பூர்வமாக நீட்டிக்கப்பட்டது.
மீண்டும் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக பேட்டி அளித்த என் சந்திரசேகரன் கடந்த ஐந்து ஆண்டுகளாக டாடா குழுமத்தை வழிநடத்துவது ஒரு பாக்கியம். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு டாடா குழுமத்தை வழிநடத்தும் வாய்ப்பால் நான் மேலும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பு வகித்த சந்திரசேகரன் தலைமையின் கீழ் இந்த பல்வேறு புதிய உயரத்தை எட்டியது. குறிப்பாக, ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடா வசம் கொண்டு வந்ததில் என் சந்திரசேகரனின் பங்கு அளப்பரியதாக கருதப்படுகிறது. கடந்தாண்டு மே மாதம் டாடா சன்ஸ் நிறுவனம் ரூபாய் 9 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் பிக் பாஸ்கெட்டை வாங்கியதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா நிறுவனமானது 1868ம் ஆண்டு ஜாம்ஜெட்ஜி டாடாவால் கடந்த 1868ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. டாடா குழுமத்திற்கு சொந்தமாக உலகின் மிகப்பெரிய 30 நிறுவனங்கள் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் டாடாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : EPF pension | பி.எஃப் ஊழியர்களுக்கு விரைவில் உயரும் பென்சன் தொகை!? விரைவில் ஹேப்பி நியூஸ்?
மேலும் படிக்க : இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் சன் டிவியின் கலாநிதிமாறனும் அவரது மனைவியும்! பத்தாண்டுகளில் ரூ.1500 கோடி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்