Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி அதிகரித்து புதிய சாதனை படைத்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகியது. சென்செக்ஸ் 79,000 புள்ளிகளை கடந்துள்ளது. நிஃப்டி 24,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
பங்குச்சந்தை நிலவரம்:
காலை 10.30 மணியளவில், பிஎஸ்இ சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயர்ந்து 79,007 ஆக இருந்தது. மறுபுறம், NSE Nifty50 98 புள்ளிகள் அதிகரித்து 23,966 இல் வர்த்தகம் செய்யப்பட்டது.
12.43 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 390.90 அல்லது 0.50% புள்ளிகள் உயர்ந்து 79,085.62 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 120.75 அல்லது 0.51% புள்ளிகள் உயர்ந்து 23,984.35 ஆக வர்த்தகமானது.
பங்குச்சந்தை காலையில் வர்த்த நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 129 புள்ளிகள் சரிந்து 78,544.87 ஆகவும் நிஃப்டி 37.60 புள்ளிகள் குறைந்து 23,831.20 ஆகவும் வர்த்தகமானது. 1405 பங்குகள் ஏற்றத்துடனும் 800 பங்குகள் நஷ்டத்திலும் 124 பங்குகள் மாற்றமின்றியும் தொடர்ந்தது.
இந்த வாரம் தொடக்கத்தில் முதல் நாளில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. பின்னர், நேற்றைய வர்த்த நேர முடிவில் சென்செக்ஸ் 769 புள்ளிகள் உயர்ந்து 78 ஆயிரத்தை கடந்து வரலாற்று சாதனை படைத்தது. இந்திய பங்குச்சந்தை மூன்றாவது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
12.15 மணி நிலவரப்படி 1,622 பங்குகள் ஏற்றத்துடஞும் 1,649 பங்குகள் சரிவுடனும் 108 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.
நிஃப்டியை பொறுத்தவரையில் ஐ.டி. துறை 1% அதிகரித்து ஏற்றத்தை பதிவு செய்தது. டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உயர்ந்திருந்தது. வங்கி, தொலைத்தொடர்பு துறை ஏற்றத்தில் இருப்பதால் பங்குச்சந்தை க்ரீனில் வர்த்தகமாகி வருகிறது. பொதுத்துறை வங்கிகளின் பங்குகளின் மதிப்பும் உயர்ந்துள்ளனது. வைஷாலி பரேஷ்க் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐ.டி,யில் ஏற்றம் கண்டன.Bank Nifty நான்காவது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இன்று 53, 000 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டதுள்ளது.
லாபம் - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
க்ரேசியம், அல்ட்ராடெக் சிமெண்ட், விர்போ, ஜெ.எஸ்.டபுள்யூ, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், இன்ஃபொசிஸ், டெக் மஹிந்திரா, டி.சி.எஸ். என்.டி.பி.சி., ஹெச்.யு.எல்., ரிலையன்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பவர்கிரிட் கார்ப், ஹீரோ மோட்டர்காஃப், ஹிண்டால்கோ, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்ஸிஸ் வங்கி, டாடா மோட்டர்ஸ், டைட்டன் கம்பெனி, நெஸ்லே, நெஸ்லே, அப்பல்லோ மருத்துவமனை, டாடா ஸ்டீல், ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
லார்சன், ஸ்ரீராம் ஃபினான்ஸ், கோல் இந்தியா, மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ, ஓன்.என்.ஜி.சி., அதானி போர்ட்ஸ், சிப்ளா, சன் பார்மா, டிவிஸ் லேப்ஸ், டாடா கான்ஸ் ப்ராட், பாரதி ஏர்டெல், அதானி எண்டர்பிரைசர்ஸ்,ஐ.டி.சி. , நெஸ்லே ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.