Stock Market Update: 500 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ்..ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை!
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 480.57 அல்லது 0.74 % புள்ளிகள் சரிந்து 65,721.25 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 133.35 அல்லது 0.70 % புள்ளிகள் சரிந்து 19,517.00 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
சென்செக்ஸ் 15 நாட்களுக்கு பிறகு 1000 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. மதியம் வர்த்த நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 900 புள்ளிகள் வரை சந்திந்தது. 3.55 மணி நேரப்படி, சென்செக்ஸ் 676 புள்ளிகள் குறைந்து வர்த்தகமானது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
சிப்ளா,இந்தஸ்லேண்ட் வங்கி, டெக் மகிந்திரா, விப்ரோ, பாரதி ஏர்டெல், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.சி.எல்., கோல் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், ரிலையன்ஸ், டி.சி.எஸ்.,எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, லார்சர்ன், இன்ஃபோசிஸ், கோடாக் மகேந்திரா, ஓ.என்.ஜி.சி., டாடா ஸ்டீல், பஜார்ஜ் ஃபினான்ஸ், டிவிஸ் லேப்ஸ், அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு,.ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்தில் வர்த்தகமான நிறுவனங்கள்
எஸ்.பி.ஐ., பஜார்ஜ் ஆட்டோ, என்.டி.பி.சி., பி.பி.சி.எல்., மாருதி சுசூகி, டாடா மோட்டர்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், பவர்கிரிட் கார்ப், அப்பல்லோ, க்ரேசியம், எம் அண்ட் எம், ஹீரோ மோட்டர்கார்ப், ஐ.டி.சி. டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், சன் பார்மா, நெஸ்லே, டாடா கான்ஸ், பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.
ஐ.டி., ஃபார்மா, வங்கிகள் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் மதிப்பு அதிகரித்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு பிறகு சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரத்திலேயே மிக குறைந்த அளவு சரிந்தது. டாலரின் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் அதிகரிப்பு ஆகிய காரணத்தால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் இடம்பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் குறைந்து 82.84 ஆக இருந்தது. நேற்று 82.73 ஆக இருந்தது.
நிஃப்டி பிரிவில் சிப்ளா, இந்தஸ்லண்ட் வங்கி, டெக் மகேந்திரா, விப்ரோ, பாரதி ஏர்டெல், பஜார்ஜ் ஆட்டோ, பாரத ஸ்டேட் வங்கி, மாருதி சுசூகி உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தில் வர்த்தகமாகின.
ஃபார்மா, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி, ஆகியவை 1 % உயர்ந்திருந்தது.